INTRO:
ஜப்பானைத் தாக்கிய சுனாமி என சமூகவலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):
சமூக வலைத்தளங்களில் “ நம்மால் ஒரு சுனாமி தந்த பாதிப்பிலிருந்து இன்னும் மீளா முடியவில்லை ஆனால் ஜப்பானில் வருடத்திற்கு 10 தடவைக்கு மேல் வருகிறது அங்கே அவர்கள் இயல்பாக இருக்கிறார்கள் 🙏🙏
#tsunami
#sealife
#japan
#lifestyle
#reelsvideoシ
#facebookreelsviral
#fb
#reelsfbシ
#trandingreels
#reelitfeelit See less”இம் மாதம் 17 ஆம் திகதி 2025 ஆம் ஆண்டு (17.03.2025) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் முதலில் சமூகவலைத்தளங்களில் பரவுகின்ற குறித்த வீடியோ பதிவில் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது இது கடந்த 2011ம் ஆண்டு மார்ச் 11 ஆம் திகதி ஜப்பான் நாட்டில் நடந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதல் தொடர்பான வீடியோ என கண்டறியப்பட்டது.
இது தொடர்பாக வெளியான செய்திகளும் எமக்கு கிடைக்கப்பெற்றன.
Tokyometal l ANNnewsCH l 2011 Japan Tsunami Archives
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், ஜப்பானைத் தாக்கிய சுனாமி பரவுகின்ற காணொளி இது 2011 ஆம் ஆண்டு ஜப்பானை சுனாமி தாக்கிய போது எடுக்கப்பட்ட வீடியோ என கண்டறியப்பட்டுள்ளது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.


