Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    12 விலங்கு இனங்களையும் இணைத்து புகைப்படம் எடுக்கப்பட்டதா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2024-03-11
    3 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :12 விலங்கு இனங்களையும் இணைத்து புகைப்படம் எடுக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட

    INTRO :
    12 விலங்கு இனங்களையும் இணைத்து புகைப்படம் எடுக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):


    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ” இலங்கையின் மத்திய மலைநாட்டில் தேயிலை தோட்டத்தில் புகைப்படக் கலைஞர் யானிக் திசேரா (Yannik Tissera) 12 விலங்கு இனங்களை இணைத்து புகைப்படம் எடுத்துள்ளார், ஒவ்வொன்றும் ஜனவரியில் மூன்று வாரங்களில் வெவ்வேறு நாட்களில் trap camera வைத்து பதிவு செய்யப்பட்டது. “ என இம்மாதம் 04 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு  (04.03.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    நாம் முதலில் குறித்த புகைப்படம் தொடர்பாக ஆய்வினை மேற்கொண்டோம்.

    இதன்போது, நாம் குறித்த புகைப்படத்தினை கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டபோது, Parrot Fish Collective (PFC) என்ற பேஸ்புக் பக்கத்தினை பதிவிட்டிருந்த பதிவு எமக்கு கிடைக்கப்பெற்றது.

    கடந்த ஜனவரி மாதத்தின் மூன்று வாரங்களுக்குள் மலையக பிரதேசத்தில் ஒரு இடத்தின் வழியாக பயணிக்கும் மிருகங்கள். ட்ரப் கெமரா (Trap Camera / Trail Camera) மூலம் பதிவு செய்யப்பட்ட வெவ்வேறு உயிரினங்களின் வெவ்வேறு நாட்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை Focus stacking / Layer stacking முறையைப் பயன்படுத்தி பல புகைப்படங்களை இணைத்து குறித்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த புகைப்படத்தில் 12 உயிரினங்கள் உள்ளன. இந்த அனைத்து உயிரினங்களும் இந்த இடத்தை இடம்பெயர்வதற்கான சந்திப்பாகவும், ஒரு நடைபாதையாகவும் பயன்படுத்துகின்றன.

    மேலும் நாம் குறித்த புகைப்படத்தினை உருவாக்கிய புகைப்படக்கலைஞரான யானிக் திசேரா தொடர்புக்கொண்டு வினவிய போது, இது Focus stacking / Layer stacking முறையைப் பயன்படுத்தி பல புகைப்படங்களை இணைத்து உருவாக்கிய படம் என உறுதி செய்தார். 

    மேலும் குறித்த Parrot Fish Collective (PFC) என்ற பேஸ்புக் பக்கத்தில் குறித்த புகைப்படம் உருவாக்கம் தொடர்பாக தெளிவூட்டல் பதிவென்றும் பதிவிடப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    எவ்வாறு Focus stacking / Layer stacking மூலம் புகைப்படத்தினை தயார் செய்கின்றனர் என்பதற்கான வீடியோ பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது.

    இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், 12 விலங்கு இனங்களையும் இணைத்து எடுக்கப்பட்ட புகைப்படம் என பரவும் புகைப்படமானது Focus stacking / Layer stacking மூலம் உருவாக்கப்பட்டது என்று கண்டறியப்பட்டுள்ளது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு

    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:12 விலங்கு இனங்களையும் இணைத்து புகைப்படம் எடுக்கப்பட்டதா?

    Fact Check By: S.G.Prabu 

    Result: Misleading

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2024-03-11

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.