Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    FIFA உலகக்கிண்ண ஆரம்ப நிகழ்வில் மதம் மாறிய வீடியோவா இது ?

    කරුණු විමර්ශනය කිරීම
    2022-11-26
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :fifa உலககிண்ண ஆரம்ப நிகழ்வின் போது மத மாறிய காட்சி என குறிப்பிட்டு ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போல

    INTRO :
    fifa உலககிண்ண ஆரம்ப நிகழ்வின் போது மத மாறிய காட்சி என குறிப்பிட்டு ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):


    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ” FIFA உலகக் கிண்ண ஆரம்ப நிகழ்வில் ஷாகிர் நாயக்கின் உரையை கேட்ட  

    4 பேர் இஸ்லாத்தை தழுவினர்..! “ என இம் மாதம் 20 ஆம் திகதி 2022 ஆம் ஆண்டு  (20.11.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    நாம் முதலில் குறித்த வீடியோ காட்சியை புகைப்படமாக மாற்றி ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, இந்த வீடியோவை abdelghani boudra என்ற யூடியூப் பக்கம் 2016 மே மாதம் 27 ஆம் திகதி பதிவேற்றம் செய்திருப்பது தெரிந்தது. அதில், “கட்டாரில் ஜாகீர் நாயக்கின் சொற்பொழிவுக்குப் பிறகு நான்கு பேர் இஸ்லாம் மதத்துக்கு மாறினர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    மேலும் மேற்கொண்ட ஆய்வின் போது, அல்ஜசீரா தொலைக்காட்சியின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் “டாக்டர் ஜாகிர் நாயக் என்ற இஸ்லாமியப் போதகரின் “கடவுள் இருக்கிறாரா?” என்ற சொற்பொழிவுக்குப் பிறகு நான்கு பேர் இஸ்லாத்தைத் தழுவுவதாக அறிவிக்கிறார்கள்” என்று 2016 ஆம் ஆண்டு பதிவிட்டிருந்தனர்.

    மேலும், கால்பந்து உலகக்கிண்ண ஆரம்ப நிகழ்வில் இஸ்லாமிய மத போதகர் ஜாகீர் உசேன் பங்கேற்று மத பிரசாரம் செய்தாரா என்று ஆய்வினை மேற்கொண்ட போது அவ்வாறான எவ்விதமான பதிவும் எம்மால் காணமுடியவில்லை.

    இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், FIFA உலகக்கிண்ண ஆரம்ப நிகழ்வில் மதம் மாறியவர்கள் என்று பதிவிட்டு பகிரப்படும் வீடியோ போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு
    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:FIFA உலகக்கிண்ண ஆரம்ப நிகழ்வில் மதம் மாறிய வீடியோவா இது ?

    Fact Check By: S.G.Prabu 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2022-11-26

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.