Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் விமான பயணம் மற்றும் குழந்தைக்கு ஜெட் ப்ளூ என பெயரிடப்பட்டதா ?

    කරුණු විමර්ශනය කිරීම
    2024-12-05
    4 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO:  விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் விமான பயணம் மற்றும் குழந்தைக்கு ஜெட் ப்ளூ என பெயரிடப்பட்டதாக சமூகவலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில


    INTRO:  
    விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் விமான பயணம் மற்றும் குழந்தைக்கு ஜெட் ப்ளூ என பெயரிடப்பட்டதாக சமூகவலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link  | Archived Link 

    சமூக வலைத்தளங்களில் “30000 அடி உயரத்தில் விமானத்தில் பிறந்த குழந்தை………..

    #todayinformation #interestingfact #babybirthand #flight #Tamilnews #interestingfact #interesting #information #infoulsgam
    30,000 அடி உயரத்தில் ஜெட் ப்ளூ விமானத்தில் ஏறிய ஒரு கர்ப்பிணிப் பெண் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். குழந்தைக்கு “ஜெட் ப்ளூ ” என்று பெயரிடப்பட்டது மற்றும் விமான நிறுவனத்திடமிருந்து வாழ்நாள் பயண அனுமதியைப் பெற்றது.”இம் மாதம் 02 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு (02.12.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

    இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    முதலில் பகிரப்படும் புகைப்படத்தினை நாம் கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டபோது, இது 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் துருக்கி விமானசேவைக்கு சொந்தமான விமானத்தில் இடம்பெற்ற சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என கண்டறியப்பட்டது.

    நாம் குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் ஆய்வு செய்தபோது, குறித்த விமானம் 42 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துக்கொண்டிருந்த போது நைபி டியாபி (28) என்ற கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

    இதன்போது உடனடியாக செயற்பட்ட விமான பணிப்பெண்கள் மற்றும் ஏனைய பயணிகள் குறித்த பெண்ணுக்கு உதவியுள்ளனர். இதன்போது குறித்த பெண்ணுக்கு பெண் குழந்தையொன்று பிறந்துள்ளதுடன், குழந்தைக்கு “கடிஜு” என பெயரிட்டுள்ளனர்.

    பெண் மற்றும் குழந்தை நலமாக உள்ளதாகவும், தற்போது அவர்கள் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் துருக்கி விமானசேவை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

    மேலும் குறித்த குழந்தையை பெற்றெடுத்த தாய் 28 வாரங்கள் நிரம்பிய நிலையில் குறித்த விமானத்தில் பயணம் செய்துள்ளமையும் காணக்கிடைத்தது. குறித்த விமான நிறுவனத்தினால் வாழ்நாள் பயணம் குறித்த குழந்தைக்கு வழங்கப்பட்டதாக எமக்கு ஆதாரங்கள் எதுவும் எமக்கு கிடைக்கவில்லை Link 1 | Link 2 | Link 3 

    நாம் ஜெட் ப்ளூ விமானத்தில் இவ்வாறு எதுவும் சம்பவம் பதிவாகியுள்ளதா என்று ஆய்வினை மேற்கொண்டபோது, கடந்த 2019 ஆம் திகதி பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி இவ்வாறு ஒரு சம்பவம் பதிவாகியுள்ளது. 

    அவர்களின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறித்த நிகழ்வினை பகிர்ந்துள்ளதோடு, Flight 1954 என்ற விமானமானது

    ‘Born To Be Blue’ என் மீள் பெயரிடுவதாக குறிப்பிட்டிருந்தனர். அதில் குழந்தைக்கு அவர்கள் சூட்டிய பெயர் எதுவும் எமக்கு கிடைக்கவில்லை, மேலும் குறித்த குழந்தைக்கு வாழ்நாள் பயணத்திற்கான அனுமதி கிடைத்ததாக எதுவும் அறியக்கிடைக்கவில்லை

    Link 1

    விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் இலவச விமான பயண சலுகை பெற்ற சம்பவம் எதுவும் இடம்பெற்றுள்ளதா என்று ஆய்வினை மேற்கொண்டபோது, கடந்த 2017 ஆம் ஆண்டு ஜுன் மாதம் Jet Airway விமானத்தில் இவ்வாறு சம்பவமொன்று இடம்பெற்றிருந்தமை காணக்கிடைத்தது. 

    குறித்த குழந்தைக்கு ஜெட் ஏர்வேஸ் விமான சேவையில் விமானம் பறக்கும் போது பிறந்த முதல் குழந்தை என்பதால் அந்தக் குழந்தை, வாழ்நாள் முழுவதும் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் இலவசமாக செல்லலாம் என நிறுவனம் அறிவித்திருந்தமை காணக்கிடைத்தது. Link

    இருப்பினும் குறித்த விமானம் சேவையானது கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தனது சேவையினை இடை நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.Link 1 | link 2 

     

    இது போன்று  EgyptAir நிறுவனமும் கடந்த 2020 ஆம் ஆண்டு விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவது பயணிக்கும் இலவச விமான டிக்கெட்டினை வழங்கியிருந்தமையும் எமது ஆய்வின் இருந்து கண்டறியப்பட்டது. Link 

    இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், 30000 அடி உயரத்தில் விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் விமான பயணம் மற்றும் குழந்தைக்கு ஜெட் ப்ளூ என பெயரிடப்பட்டுள்ளது என பகிரப்படும் தகவல் தவறானது என்று  கண்டறியப்பட்டது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு


    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் விமான பயணம் மற்றும் குழந்தைக்கு ஜெட் ப்ளூ என பெயரிடப்பட்டதா ?

    Fact Check By: S.G.Prabu 

    Result: Misleading

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2024-12-05

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.