Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    நோபாள வெள்ளம் என பகிரப்படும்  AI  தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்ட காணொளி!!!

    කරුණු විමර්ශනය කිරීම
    2026-08-29
    3 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    Subscribe to our WhatsApp Channel INTRO 2026 ஆகஸ்ட் 26 அன்று நேபாள–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக நேபாளத்தின் ரசுவா, நுவாகோட், தாதிங், கோர்கா, சித்வான் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வெள்ளம் போதேகோஷி மற்றும் த

    Subscribe to our WhatsApp Channel

    INTRO

    2026 ஆகஸ்ட் 26 அன்று நேபாள–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக நேபாளத்தின் ரசுவா, நுவாகோட், தாதிங், கோர்கா, சித்வான் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

    இந்த வெள்ளம் போதேகோஷி மற்றும் திரிசூலி ஆற்றுப் பகுதிகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பனிச்சரிவு மற்றும் அதனால் ஏற்பட்ட தற்காலிக நீர்த்தேக்க உடைப்பு ஆகியவை வெள்ளத்திற்கான முக்கிய காரணிகளாகக் குறிப்பிடப்படுகின்றன.

    ஆகஸ்ட் 29 வரையான தகவலின்படி  600 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் எனவும் 2,இற்கும் மேற்பட்டோர்  காணாமல் போயுள்ளதாகவும், 2,300-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில் தற்போது ஒரு நொடியில் ஒரு ஊரையே அழித்த ஆற்று வெள்ளம் என தெரிவித்து ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது.

    எனவே இந்த காணொளி தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

    தகவலின்விவரம் (What is the claim):

    Facebook | Archived Link

    நொடியில் நிர்மூலமாக்கிய ஆற்று வெள்ளம் என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளி 2026.08.27 ஆம் திகதி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது.

    மேலும் இதனை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    கடந்த 26 ஆம் திகதி நேபாளத்தில்  இடம்பெற்ற வெள்ளம் தொடர்பில் உத்தியோகபூர்வ சர்வதேச ஊடகங்களில் செய்திகள், காணொளி, புகைப்படங்கள் என்பன வெளியிடப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.

    இருப்பினும் மேற்குறிப்பிட்ட காணொளிகள் அந்த ஊடகங்களில் வெளியாகியிருக்கவில்லை என்பதனை எம்மால் அறிய முடிந்தது.

    ஆகவே நாம் இந்த காணொளியின் சில காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உடுப்படுத்தி ஆய்வினை மேற்கொண்டிருந்தோம்.

    இதன்போது, BBC செய்தி நிறுவனம் இந்த காணொளி செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டுள்ளதனை உறுதிப்படுத்தி அறிக்கையிட்டிருந்தது.

    மேலும் சில சர்வதேச உண்மைக் கண்டறியும் நிறுவனங்களும் இந்த காணொளி செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்ட காணொளி என்பதனை உறுதிபடுத்தியுள்ளது. Link 

    ஆகவே நாம் இந்த காணொளியை Ai Detective Tool இற்கு உட்படுத்தி ஆய்வினை மேற்கொண்ட போது இந்த காணொளியானது செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டுள்ளமை உறுதியானது.

    எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  |TikTok | Youtube

    Conclusion: முடிவு

    எனவே எமது ஆய்வின் அடிப்படையில் நோபாள வெள்ளத்தின் போது எடுக்கப்பட்டதாக பகிரப்பட்ட காணொளியானது போலியானது என்பதுடன் அது செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தால் உருவாக்கப்பட்ட காணொளி என்பதுவும் கண்டறியப்பட்டுள்ளது.

     இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

    Result Stamp

    Title: நோபாள வெள்ளம் என பகிரப்படும் AI தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்ட காணொளி!!!

    Fact Check By: Suji Shabeedharan

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SS

    Suji Shabeedhran

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2026-08-29

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.