Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    விளம்பரப்படத்தில் இருந்த பசுவிடம் பால் குடிக்க முயன்ற கன்றுக்குட்டி என பகிரப்படும் காணொளி உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2026-09-15
    4 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    Subscribe to our WhatsApp Channel INTRO லொறி ஒன்றின் பின்புறம் அச்சிடப்பட்டிருந்த பசுவின் விளம்பரப் படத்தைப் பார்த்து, பசியால் வாடிய கன்றுக்குட்டி ஒன்று அதனருகில் சென்று பால் குடிக்க முயற்சிப்பதாகக் கூறி, உணர்ச்சியைத் தூண்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில்

    Subscribe to our WhatsApp Channel

    INTRO

    லொறி ஒன்றின் பின்புறம் அச்சிடப்பட்டிருந்த பசுவின் விளம்பரப் படத்தைப் பார்த்து, பசியால் வாடிய கன்றுக்குட்டி ஒன்று அதனருகில் சென்று பால் குடிக்க முயற்சிப்பதாகக் கூறி, உணர்ச்சியைத் தூண்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வந்தது. 

    எனவே இந்த காணொளி தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

    தகவலின்விவரம் (What is the claim):

    Facebook | Archived Link

    பசுவின் படத்தைப் பார்த்து பால் குடிக்க முயன்ற கன்று…

    மனதைத்தொடும் காணொளி!

     இணையத்தில் வைரல் என தெரிவித்து இந்த காணொளியானது,கடந்த 2026.09.04 ஆம் திகதி சமூக ஏடகங்களில் பகிரப்பட்டிருந்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் மேற்கண்ட காணொளி உண்மையானதாக இருந்தால், அந்த காணொளி ஏதேனும் அதிகாரப்பூர்வமான மூலங்களில் செய்தியாகப் பதிவாகியிருக்க வாய்ப்புள்ளது. எனவே, நம்பகமான மூலங்கள் மூலம் இந்தக் காணொளி குறித்து ஏதேனும் தகவல் வெளியாகியுள்ளதா என்பதை அறிய, குறித்த காணொளியின் காட்சிகளை ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்தி ஆய்வினை மேற்கொண்டிருந்தோம்.

    இதன்போது, ‘Realish AI’ என்ற பெயரில் இயங்கும் ஃபேஸ்புக் பக்கம் ஒன்றில் இந்தக் காணொளி பதிவிடப்பட்டுள்ளதுடன், இது AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளி என்பதும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Facebook 

    இந்த ஃபேஸ்புக் பக்கம் AI மூலம் உருவாக்கப்பட்ட படைப்புகளைத் தயாரித்து வெளியிடும் பக்கமாகும். அவர்களின் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் கணக்குகளிலும், இதுபோன்று AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட மேலும் பல காணொளிகளைக் காண முடிந்தது.

    காணொளியில் காணப்படும் இயற்கைக்கு மாறான அம்சங்கள்

    சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் காணொளியில், “VIJAYA DAIRY” என்ற லோகோவிற்கு கீழே “Wiewing Dairy” எனக் காணப்படுகிறது. Generative AI தொழில்நுட்பத்தின் மூலம் எழுத்துக்கள் உருவாக்கப்படும்போது ஏற்படும் பிழையாக இதனை அடையாளம் காண முடியும்.

    மேலும், வாகனத்தின் மீது கன்றுக்குட்டி தனது முன் கால்களை வைத்துக் கொண்டிருக்கும் போது, அதன் நகர்வும் கால்களின் அசைவுகளும் இயற்கைக்கு மாறானதாகத் தோன்றுகின்றன. காணொளியின் வெவ்வேறு பகுதிகளில் வாகனத்தின் இலக்கத் தகட்டில் காணப்படும் எழுத்துகள் மற்றும் எண்கள் தெளிவற்றதாக இருப்பதுடன், அவற்றின் வடிவங்களும் மாறுபடுகின்றன.

    மேலும், கேரளாவின் வாகனப் பதிவுத் தரவுகளின்படி, வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள வாகன இலக்கம் “KL 39 K 704” என்பது Tata Nano ரக காருக்குரியதாகும். ஆனால், காணொளியில் லொறி ஒன்றே காணப்படுகிறது. அதேபோல், கேரளாவில் இவ்வாறான சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என்பதையும் எமது Fact Crescendo கேரளக் குழுவினர் மேற்கொண்ட உண்மைச் சரிபார்ப்பின் மூலம் இங்கே சுட்டிக்காட்டியுள்ளனர்.

    மேலும், வைரல் பதிவுகளில் காணப்படும் “VIJAYA DAIRY” என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் இயங்கும் நிறுவனமல்ல. மாறாக, இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்து வரும் ஒரு வர்த்தக நாமமாகும். 

    AI தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட காணொளி

    இதனடிப்படையில், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களை அடையாளம் காணும் கருவிகளின் மூலம் நாம் மேற்கொண்ட பரிசோதனையில், இது AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளி என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

    எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  |TikTok | Youtube

    Conclusion: முடிவு

    எனவே எமது ஆய்வின் அடிப்படையில் லொறி ஒன்றின் பின்புறம் அச்சிடப்பட்டிருந்த பசுவின் விளம்பரப் படத்தைப் பார்த்து, பசியால் வாடிய கன்றுக்குட்டி ஒன்று அதனருகில் சென்று பால் குடிக்க முயற்சிப்பதாகக் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் காணொளி, AI (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட காணொளி என்பது கண்டறியப்பட்டுள்ளது. 

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

    Result Stamp

    Title: விளம்பரப்படத்தில் இருந்த பசுவிடம் பால் குடிக்க முயன்ற கன்றுக்குட்டி என பகிரப்படும் காணொளி உண்மையா?

    Fact Check By: Suji Shabeedharan

    Result: Altered

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SS

    Suji Shabeedhran

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2026-09-15

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.