Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    ஒரே ஓவரில் 6 விக்கெட் எடுத்த மேற்கிந்திய வீரர் ஜோசப் உலக சாதனை என பகிரும் காணொளி உண்மையா?

    2026-01-06
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO : ஒரே ஓவரில் 6 விக்கெட் எடுத்த மேற்கிந்திய வீரர் ஜோசப் உலக சாதனை என ஒரு காணொளி பதிவு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவ


    INTRO :

    ஒரே ஓவரில் 6 விக்கெட் எடுத்த மேற்கிந்திய வீரர் ஜோசப் உலக சாதனை என ஒரு காணொளி பதிவு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.



    தகவலின்விவரம் (What is the claim):

     Facebook Link  | Archived Link

    சமூகவலைத்தளங்களில் “West indies வீரர் ஜோசப், உலகையே மிரள வைத்த பந்துவீச்சு, யாரும் செய்ய முடியாத வரலாற்று சாதனை.. எதிரணி ஒன்றும் சாதாரண அணி இல்லை, உலகின் No1  அணியான Australia… இரட்டை Hatrick ஒரே ஓவரில் “என இம் மாதம் 04 ஆம் திகதி 2026 ஆம்ஆண்டு  (04.01.2026) பதிவேற்றம்செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து பலர்பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    கிரிக்கெட் உலகில் இவ்வாறு ஒரு சாதனை நடந்திருந்தால் அது தொடர்பாக சர்வதேச ஊடகம் மட்டுமல்ல, உள்ளூர் ஊடகமும் இது தொடர்பான செய்திகள் வெளியிட்டிருக்கும். நாம் ஆய்வினை மேற்கொண்டபோது, அவ்வாறான எவ்விதமான செய்திகளும் வெளியாகியிருக்கவில்லை.

    குறித்த பதிவில் குறிப்பிட்டுள்ளவாறு இக்காலக்கட்டத்தில் அவுஸ்ரேலியா அணிக்கும், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் எதும் டெஸ்ட் போட்டிகள் நடைப்பெறுகின்றதா என ஆய்வினை மேற்கொண்டபோது, அவுஸ்ரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான The Ashes போட்டித்தொடர் அவுஸ்ரேலியாவில் இடம்பெற்று வருகின்றமை காணக்கிடைத்தது.

    மேலும் மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்த காலக்கட்டத்தில் எவ்விதமான டெஸ்ட் போட்டிகளிலும் பங்குகொள்ளவில்லை என்பது கண்டறியப்பட்டது. windiescricket.com

    நாம் குறித்த காணொளியின் சில காட்சி புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவஸ் இமேஜீனை பயன்படுத்தி ஆய்வுசெய்த போது, கடந்த 2024 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஷமர் ஜோசப் 68 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களை பெற்று மேற்கிந்தியத் தீவுகள் குறித்த போட்டியில் வெற்றி வாகை சூடுவதற்கு மிக முக்கியமான பங்களிப்பினை அவர் செய்தார். 

    இருப்பினும் அவர் குறித்த 6 விக்கெட்டுக்களையும் ஒரே ஒவரில் பெற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் குறித்த தொடரினை 1-1 என்ற போட்டி அடிப்படையில் சமநிலையில் முடிக்கவும் அவர் உதவியாக இருந்தார். தான் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி இரண்டாவது டெஸ்ட் போட்டியிலே அவர் குறித்த சாதனையினை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Link

    சர்வதேச போட்டியில் தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக்கெட்டுக்கள் பெற்ற சாதனையினை லசித் மாலிங்க நிகழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஒரே ஒவரில் அல்லது தொடர்ந்து 6 பந்துகளில் 6 விக்கெட்டுக்கள் என்ற சாதனை இதுவரையில் சர்வதேச போட்டிகளில் யாரும் நிகழ்த்தவில்லை.

    மாறாக உள்ளூர் மற்றும் கழகங்களுக்கு இடையிலான போட்டிகளில் குறித்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவுஸ்ரேலியாவின் ஆலெட் கேரி , கேரத் மோர்கன் மற்றும் இங்கிலாந்தில் ஆலிவர் வைட்ஹவுஸ் இந்த சாதனையினை நிகழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் ஒரே ஓவரில் 6 விக்கெட் எடுத்த மேற்கிந்திய வீரர் ஜோசப் உலக சாதனை என பகிரப்படும் தகவல் தவறானது என கண்டறியப்பட்டுள்ளது.

    எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  |TikTok| Youtube

    Conclusion: முடிவு
    எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

    Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2026-01-06

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.