Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    பாலஸ்தீன் நாட்டுக்கு ஆதரவாக நிற்கும் ரொனால்டோ என பரவும் வீடியோ உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2023-10-30
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :பாலஸ்தீன் நாட்டுக்கு ஆதரவாக நிற்கும் ரொனால்டோ என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நி

    INTRO :

    பாலஸ்தீன் நாட்டுக்கு ஆதரவாக நிற்கும் ரொனால்டோ என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):



    Facebook Link | Archived Link 

    சமூகவலைத்தளங்களில் “#பாலஸ்தீனத்துடன் துணை நிற்கும் ரெணால்டோ…🇯🇴🇯🇴 “ என இம் மாதம் 16 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு  ( 16.10.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    <iframe frameBorder=’0′ width=’640′ height=’360′ webkitallowfullscreen mozallowfullscreen allowfullscreen src=”https://www.awesomescreenshot.com/embed?id=21995580&shareKey=e4aaeaabcb3d2cb17163249c61f79b60″></iframe>

    மேலும் உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    இது தொடர்பாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்ட போது, 

    நாம் முதலில் குறித்த வீடியோவை புகைப்படமாக மாற்றி அந்த புகைப்படத்தினை கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, ரொனால்டோவின் உத்தியோகப்பூர்வ இன்ஸ்டெகிராம் பக்கத்தில் கடந்த 2016 குறித்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    https://www.instagram.com/p/BOXLs1bgPTS/

    மேலும் குறித்த வீடியோ அவரின் உத்தியோகப்பூர்வ x (டுவிட்டர்) தளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    அதில் சிரியாவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்த குழந்தைகளுக்காக குறித்த பதிவு என பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    Archived Link

    அதே போன்று சில சர்வதேச ஊடகங்களிலும் குறித்த வீடியோ தொடர்பாக 2016 ஆம் ஆண்டு காலத்தில் வெளியான செய்திகளும் கிடைக்கப்பெற்றன.

    washingtonpost.com |thesun.co.uk |marca.com

    நாம் மேற்கொண்ட ஆய்வறிக்கையின் படி பாலஸ்தீன் நாட்டுக்கு ஆதரவாக நிற்கும் ரொனால்டோ என பரவுகின்ற வீடியோ 2016 ஆம் ஆண்டு சிரியாவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக வெளியிடப்பட்ட வீடியோ என்பது எம்மால் கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு
    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:பாலஸ்தீன் நாட்டுக்கு ஆதரவாக நிற்கும் ரொனால்டோ என பரவும் வீடியோ உண்மையா?

    Written By: S G Prabu 

    Result: False

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2023-10-30

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.