Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    ஏர் இந்தியா AI171 விமானத்தில் இறுதியாக எடுக்கப்பட்ட புகைப்படங்களா இவை?

    කරුණු විමර්ශනය කිරීම
    2025-07-05
    3 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    கடந்த மாதம் 12 ஆம் திகதி இந்தியாவின் அஹமதாபாத்தில் இடம்பெற்ற கோரமான விமான விபத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி மற்றும் புகைப்படங்கள் என தெரிவிக்கப்பட்ட தகவல்கள் தொடர்ந்தும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டே வருகின்றன. அந்தவகையில் தற்போது அஹமதாபாத்தில் விமான விபத்

    கடந்த மாதம் 12 ஆம் திகதி இந்தியாவின் அஹமதாபாத்தில் இடம்பெற்ற கோரமான விமான விபத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி மற்றும் புகைப்படங்கள் என தெரிவிக்கப்பட்ட தகவல்கள் தொடர்ந்தும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டே வருகின்றன.

    அந்தவகையில் தற்போது அஹமதாபாத்தில் விமான விபத்தின் கடைசி தருணத்தின் படம் என தெரிவிக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை எம்மால் காணமுடிந்தது.

    எனவே இது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

    தகவலின் விவரம் (What is the claim)

    Facebook | Archived Link

    குறித்த பதிவில் அகமதாபாத்தில் விமான விபத்தின் கடைசி தருணத்தின் படம் என தெரிவிக்கப்பட்டு 2025.06.27 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

    YouTube இலும் இந்த புகைப்படங்கள் விமான விபத்தின் போது எடுக்கப்பட்ட கடைசி புகைப்படங்கள் என தெரிவித்து பரவலாக பகிரப்பட்டிருந்தமையையும் காணமுடிந்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    ஏர் இந்தியா AI171 விமானம் விபத்திற்குள்ளாவதற்கு முன்னர் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் இந்த புகைப்படங்கள் தொடர்பில் இந்திய ஊடகங்கள் உள்ளிட்ட வேறு எந்த சர்வதேச ஊடகங்ளிலும் செய்திகள் வெளியாகியிருக்கவில்லை.

    இந்த புகைப்படங்கள் உண்மையான புகைப்படங்களாக இருக்கும் பட்சத்தில் அவை நிச்சியமாக பிரதான ஊடகங்களில் வெளியாகியிருக்க வேண்டும்.

    மேலும், விமானப் புலனாய்வாளர்கள் அல்லது பொலிஸார் உட்பட எந்த அதிகாரப்பூர்வ நிறுவனங்களும், விபத்து நடந்த இடத்திலிருந்து அத்தகைய புகைப்படம் எடுக்கப்பட்டதை உறுதிப்படுத்தவில்லை. 

    அப்படியானால், இந்த புகைப்படம் எவ்வாறு பெறப்பட்டது என்பது குறித்து எந்தக் குறிப்பும் இல்லை என்ற கேள்வி எழுகின்றது.

    மேலும் இந்த புகைப்படங்களில் AI தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டதனைப் போன்று முகத்தோற்றங்களில் மாற்றங்கள் காணப்பட்டமையினையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.

    எனவே நாம் இந்த புகைப்படங்களை AI Detective Tool ஐ பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்ட போது, இவை AI தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டவை என்பது உறுதியானது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு

    எனவே எமது ஆய்வின் அடிப்படையில் அஹமதாபாத் விமான விபத்தின் கடைசி தருணத்தின் புகைப்படங்கள் என பகிரப்பட்ட புகைப்படங்களானது செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டவை என்பது கண்டறியப்பட்டது.

    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:ஏர் இந்தியா AI171 விமானத்தில் இறுதியாக எடுக்கப்பட்ட புகைப்படங்களா இவை?

    Fact Check By: suji shabeedharan 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SS

    Suji Shabeedhran

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2025-07-05

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.