Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    அமெரிக்காவில் மீண்டும் காட்டுத்தீ பரவுகிறதா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2025-04-04
    3 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    அமெரிக்காவில் மீண்டும் லிலாக் எனும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் 85 ஏக்கர் நிலம் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் காணொளியொன்று பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃப

    அமெரிக்காவில் மீண்டும் லிலாக் எனும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் 85 ஏக்கர் நிலம் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் காணொளியொன்று பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது.

    எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

     தகவலின் விவரம் (What is the claim)

    Facebook | Archived Link 

    குறித்த பதிவில் மீண்டும் அமெரிக்காவில் லிலாக் எனும் காட்டுத்தீ. இதுவரை 85 ஏக்கர் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.03.28 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

    மேலும் குறித்த காணொளி உண்மை என எண்ணி பலரும் கமென்ட் செய்திருந்தமையையும் எம்மால் காணமுடிந்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    மேற்குறிப்பட்ட சமூக ஊடகப் பதிவில் தெரிவிக்கப்பட்டதனைப்போன்று மீண்டும் அமெரிக்காவில் காட்டுத்தீ பரவிவருகின்றமை தொடர்பில் சர்வதேச ஊடகங்களில் ஏதேனும் செய்திகள் வெளியாகியுள்ளனவா என நாம் ஆராய்ந்த போது அவ்வாறான எந்தவித செய்திகளையும் எம்மால் காணமுடியவில்லை. 

    ஆனால் கடந்த ஜனவரி மாதத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட  லிலாக் (Lilac) எனும் காட்டுத்தீ தெடர்பில் அக்காலப் பகுதியில் சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தமையை பார்க்க முடிந்தது.Link | Link 

    அமெரிக்காவில் மீண்டும் காட்டுத்தீ எற்பட்டுள்ளதா என்பதனை அறிந்து கொள்ளும் நோக்கில் நாம் கலிபோர்னியா வனவியல் மற்றும் தீ பாதுகாப்புத் திணைக்களத்தின் இணையத்தளத்தில் ஆராய்ந்த போது அதில் கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட லிலாக் காட்டுத்தீ தொடர்பான பதிவுகள் மாத்திரமே வெளியிடப்பட்டிருந்தது.

    மேலும் குறித்த காணொளியை உற்று நோக்கும் போது அவற்றின் அசைவுகளில் ஒரு செயற்கை தன்மை காணப்பட்டமையினால், நாம் அந்த காணொளியை AI Detective Tool ஐ பயன்படுத்தி ஆய்வு செய்த போது குறித்த காணொளியானது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்பது உறுதியானது.

    கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட கலிபோர்னியா காட்டுத்தீயின் போதும் இவ்வாறான AI தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்ட பல காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

    Also Read:

    கலிபோர்னியா காட்டுத்தீ என பகிரப்படும் காணொளிகள் தொடர்பான உண்மை என்ன?

    லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயில் தப்பிய வீடு என பகிரப்படும் புகைப்படம் பற்றிய உண்மை தெரியுமா ?

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion (முடிவு)

    மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில்  மீண்டும் அமெரிக்காவில் லிலாக் எனும் காட்டுத்தீ என தெரிவிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளியானது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளி என்பது தெளிவாகின்றது.

    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SS

    Suji Shabeedhran

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2025-04-04

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.