Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    பூமியில் இறக்கைகள் கொண்ட குதிரை தோன்றியதாக பகிரப்படும் காணொளி உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2025-08-18
    3 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    பூமியில் திடீரென்று  இறக்கைகளைக் கொண்ட குதிரை தோன்றியுள்ளதாக தெரிவித்து காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது.  எனவே அது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (Wh

    பூமியில் திடீரென்று  இறக்கைகளைக் கொண்ட குதிரை தோன்றியுள்ளதாக தெரிவித்து காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது. 

    எனவே அது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

    தகவலின்விவரம் (What is the claim):

    Instagram|  Facebook | Archived Link

    குறித்த பதிவில் திடீரென்று பூமியில் தோன்றிய ரெக்கை முளைத்த குதிரை என தெரிவித்து கடந்த 2025.07.14 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

     Fact Check (உண்மை அறிவோம்)

    உண்மையில் உலகில்  இறக்கைகளுடன் ஒரு குதிரையொன்று தோன்றியிருக்குமாயின் அது குறித்து பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கும். எனினும் நாம் மேற்கொண்ட ஆய்வில் எந்தவொரு உள்நாட்டு மற்றும் சர்வதேச ஊடகங்களிலும் அவ்வாறான செய்திகள் வெளியாகியிருக்கவில்லை.

    மேலும் நாம்  இறக்கைகளுடன் குதிரையொன்று உலகில் எங்காவது தோன்றியுள்ளமை தொடர்பில் ஏதேனும் நம்பத்தகுந்த அறிக்கைகள் இருக்கின்றனவா என அராய்ந்த போது அவ்வாறான தகவல்களையும் எம்மால் காணமுடியவில்லை. 

    அத்துடன் குறித்த காணொளி பொய் என்ற விதத்திலான பல  கமெண்ட்களையும் எம்மால் காணமுடிந்தது.

    ஆகவே அந்த காணொளியை நன்கு கவனித்த போது அதில் அந்த குதிரையின் இறக்கைகள் இயற்கையாக உருவானவை போல தோன்றவில்லை. 

    எனவே குறித்த காணொளியை நாம்  AI Detective Tool ஐ பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டோம். இதன் போது இந்த காணொளியானது AI தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டுள்ளமை உறுதியானது.

    எங்களதுசமூகவலைதளபக்கங்களைபின்தொடர….


    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  |TikTok| Youtube

    Conclusion: முடிவு

    அதற்கமைய எமது ஆய்வின் அடிப்படையில் திடீரென்று பூமியில் தோன்றிய  இறக்கை முளைத்த குதிரை என பகிரப்படும் காணொளியானது போலியானது என்பதுடன் அது செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டது.

    எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

    Avatar

    Title:பூமியில் இறக்கைகள் கொண்ட குதிரை தோன்றியதாக பகிரப்படும் காணொளி உண்மையா?

    Fact Check By: Suji shabeedharan 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SS

    Suji Shabeedhran

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2025-08-18

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.