Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    மேடையில் வைத்து ட்ரம்பின் தலையில் ஒருவர் அடித்து விட்டுச் செல்லும் காணொளி உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2025-04-19
    3 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பதவியேற்றதையடுத்து அவரின் வரி விதிப்புகள் தொடர்பில் உலக நாடுகள் அவர் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்த வண்ணமே உள்ளன. இந்நிலையில் கூட்டமொன்றில் பொதுமக்கள் மத்தியில் பேசிக்கொண்டிக்கும் போது அவரின் தலையில் ஒரு இ

    அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பதவியேற்றதையடுத்து அவரின் வரி விதிப்புகள் தொடர்பில் உலக நாடுகள் அவர் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்த வண்ணமே உள்ளன.

    இந்நிலையில் கூட்டமொன்றில் பொதுமக்கள் மத்தியில் பேசிக்கொண்டிக்கும் போது அவரின் தலையில் ஒரு இளைஞர் அடித்துவிட்டு செல்வதைப் போன்ற காணொளி ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருவதனை எம்மால் காணமுடிந்தது.

    எனவே இது தொடர்பில் உண்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

    தகவலின் விவரம் (What is the claim)

    Facebook | Archived Link

    குறித்த காணொளியில் அரசியல்வாதிகள் மேடையில் பொய் பேசும்போது இப்படி அறையலாம் என்றால் எப்படி இருக்கும்? ஐயோ,

    நம்ம மைண்ட் வேற அவனுங்க பக்கம் போகுதே! என தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.04.13 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

    மேலும் இந்த காணொளி தொடர்பான  உண்மை அறியாத பலரும் சமூக ஊடகங்களில் அதனை பகிர்ந்திருந்தமையை எம்மால் காணமுடிந்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    இது தொடர்பான உண்மையை அறியும் நோக்கில் இந்த காணொளியின் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்திய போது 9 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க ஊடகங்களில் வெளியாகியிருந்த உண்மையான காணொளியை எம்மால் காணமுடிந்தது.

    அதில் கடந்த 2016 ஆம் ஆண்டு  அமெரிக்காவில் இடம்பெற்ற கூட்டமொன்றின் போது அத்துமீறி நுழைய முற்பட்ட ஒருவரை  ட்ரம்ப் எதிர்கொண்ட போது அவரை பாதுகாப்பதற்காக ட்ரம்பின் பாதுகாவலர்கள் அவரை சுற்றி நின்ற வேளையில் எடுக்கப்பட்ட காணொளியானது CNN YouTube தளத்தில் பதிவேற்றப்பட்டிருந்தது.

    2016 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் போது, ஓஹியோவில் உள்ள டேட்டன் சர்வதேச விமான நிலையத்தில் ட்ரம்பின் தேர்தல் பிரச்சாரத்தின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    Archived Link

    கடந்த 2016 ஆம் ஆண்டு ட்ரம்பின் தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ட்ரம்பின் தலையில் யாரும் அடிக்கவில்லை என்பதுவும் அந்த காட்சியானது செயற்கையாக உட்புகுத்தப்பட்டுள்ளமையும் தெளிவாகின்றது.

    மேலும் குறித்த பிரச்சார கூட்டத்திற்குள் ஒருவர் அத்துமீறி நுழைய முயன்ற போது உடனடியாக பாதுகாப்புப் பணியாளர்களால் அவர் கைது செய்யப்பட்டதாக, ட்ரம்பின் பிரச்சார செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாக  NBC News இல் செய்தி வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

    தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளியின் காட்சியையும், உண்மையில் சம்பவம் இடமபெற்ற போது எடுக்கப்பட்ட காணொளியின் காட்சியையும் ஒப்பீட்டு பார்க்கும் போது, ட்ரம்பின் தலையில் ஒருவர் அடித்து விட்டு செல்லும் காட்சியானது எடிட் செய்யப்பட்டு போலியாக உட்புகுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion (முடிவு)

    மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் பொதுக் கூட்டமொன்றில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உரையாற்றிக்கொண்டிருக்கும் போது அவரின் தலையில் ஒருவர் தாக்கும் காணொளியானது போலியாக உருவாக்கப்பட்ட ஒன்று என்பது தெளிவாகின்றது.

    மேலும் 2016 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஓஹியோ விமான நிலையத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது பாதுகாப்பை மீறி ஒருவர் உள்நுழைய முற்பட்பட்ட போது அவரை ட்ரம்ப் எதிர்க்க முற்பட்டபோது அவரின் பாதுகாவலர்கள் டொனால்ட் ட்ரப்பை சுற்றி நிற்கும் வேளையில் எடுக்கப்பட்ட உண்மையான காணொளியை பயன்படுத்தியே இந்த போலியான காணொளி உருவாக்கப்பட்டுள்ளமை புலனாகின்றது.

    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SS

    Suji Shabeedhran

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2025-04-19

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.