Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    டீ கேட்டதற்கு காஃபி கொடுத்ததால் கத்திய முதியவர் என பரவும் வீடியோ உண்மையா ?

    කරුණු විමර්ශනය කිරීම
    2024-02-05
    3 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :டீ கேட்டதற்கு காஃபி கொடுத்ததால், கத்திய முதியவர் என சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ

    INTRO :
    டீ கேட்டதற்கு காஃபி கொடுத்ததால், கத்திய முதியவர் என சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):


    Facebook Link | Archived Link

    சமூக வலைத்தளங்களில் ” ஒன்னும் இல்ல டீ கேட்டதுக்கு காஃபி கொடுத்துட்டாங்கலாம் 😯😯😂

    #salem #tamilnadu #tea #trendingreels #music #trending “ என இம் மாதம் 01 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு  (01.02.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது. மேலும் பலர் குறித்த முதியவரை தீட்டி கமெண்டுகள் பதிவிட்டுள்ளமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்) 

    நாம் முதலில் குறித்த வீடியோவில் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவஸ் இமேஜ் பயன்படுத்தி ஆய்வு மேற்கொண்டோம்.

    குறித்த தேடலின் போது, Fly High Institute என்ற யூடியூப் சேனலில் கடந்த ஜனவரி 15 ஆம் திகதி “விமானப் பயணத்தின் போது பயணிகளுக்கு குளிர்பானங்கள் வழங்கப்படுகின்றன” என்ற தலைப்பில் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ பதிவிடப்பட்டிருந்தது.

    youtube.com

    குறித்த வீடியோவில் இது ஒரு எடுத்துக்காட்டு வீடியோ என குறிப்பிடப்பட்டுள்ளமையும் காணக்கிடைத்தது. இது போன்ற சம்பவங்களில் விமான பணியாளர்கள் தங்களின் பொறுமையினை கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தினை எடுத்துக்காட்டும் விதமாக இந்த வீடியோ உருவாக்கப்பட்டதாகவும் தெரியவந்தது.

    மேலும், நாம் குறித்த யூடியுப் சேனலினை ஆய்வு செய்தோம். அப்போது, சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோவில் உள்ள வயோதிகர் நடித்த பல வீடியோக்கள் அதில் இடம்பெற்றமையும் அறிந்தோம்.

    இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில்,  டீ கேட்டதற்கு காஃபி கொடுத்ததால் கத்திய முதியவர் என பரவும் வீடியோ ஒரு எடுத்துகாட்டு வீடியோ என கண்டறிந்துள்ளோம்.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு

    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:டீ கேட்டதற்கு காஃபி கொடுத்ததால் கத்திய முதியவர் என பரவும் வீடியோ உண்மையா ?

    Written By: S.G.Prabu 

    Result: Misleading

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2024-02-05

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.