Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    இந்தியா ராடார் மூலம் தானியங்கி தாக்குதல் என பரவும் காணொளிகள் உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2025-05-16
    3 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :   இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே எல்லை மோதலில் ராடார் மூலம் தானியங்கி தாக்குதல் என ஒரு காணொளி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தக

    INTRO :  

    இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே எல்லை மோதலில் ராடார் மூலம் தானியங்கி தாக்குதல் என ஒரு காணொளி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.



    தகவலின் விவரம் (What is the claim):

     Facebook Link  | Archived Link


    சமூகவலைத்தளங்களில் “Jf17 மர்கயா😂😂“ என இம் மாதம் 07 ஆம் திகதி 2025 ஆம் ஆண்டு  (07.05.2025) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    குறித்த காணொளியை நன்கு அவதானித்தால், அதில் உள்ள காட்சிகள் செயற்கையாக உருவாக்கப்பட்டதை போன்று காணப்பட்டதால் நாம் அந்த காணொளியில் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி அதனை ரிவ்ஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்தபோது, இது கடந்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி இன்ஸ்டாகிராம் பக்கமொன்றில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த காணொளியினை ஒத்திருந்தமை கண்டறியப்பட்டது.

    நாம் குறித்த காணொளியில் மேலும் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி ஆய்வு செய்தபோது, MilsimF என்ற யூடியுப் அலைவரிசையில் இதே காணொளியை ஒத்த காணொளி ArmA 3 என்ற கேமிங் வீடியோ என பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

    ArmA 3

    இது ஒரு இணையவழி ஊடாக விளையாடும் கேமிங் ஆகும். இது கடந்த 2013 ஆம் ஆண்டு உத்தியோகப்பூர்வமாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. Bohemia Interactive Studio மற்றும் BOHEMIA INTERACTIVE a.s. ஆகிய நிறுவனங்களால் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

    Bohemia Interactive Studio நிறுவனமே கடந்த 2023 ஆம் ஆண்டு தனது கேமிங் காட்சிகளை பயன்படுத்து போலியான தகவல்கள் பகிரப்படுவதாக அறிவித்திருந்த அறிவிப்பு எமக்கு கிடைக்கப்பெற்றது. bohemia.net

    இணையத்தில் வைரலாக பரவுகின்ற ராடார் மூலம் தானியங்கி தாக்குதல்  மேற்கொண்ட இந்தியா என்ற காணொளி தொடர்பாக சர்வதேச உண்மை சரிபார்க்கும் நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் குறித்த காணொளி போலியானது என தெரிவிக்கப்பட்டிருந்தமையும் எம்மால் காணக்கிடைத்தது. Link 1 | Link 2

    பாகிஸ்தானின் F-16 போர் விமானம்

    வைரலாக பரவும் காணொளியில் தெரிவிக்கப்பட்டது போன்று பாகிஸ்தானின் F-16 போர் விமானத்தினை இந்தியா வீழ்த்தியுள்ளதாக என்.டி.டி.வி தளம் தெரிவித்துள்ளதாக வெளியான செய்திகள் எமக்கு கிடைக்கப்பெற்றன. News link

    இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்தியா ராடார் மூலம் தானியங்கி தாக்குதல் என பரவும் காணொளிகள் கேமிங் காணொளிகள் என கண்டறியப்பட்டுள்ளது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு


    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:இந்தியா ராடார் மூலம் தானியங்கி தாக்குதல் என பரவும் காணொளிகள் உண்மையா?

    Fact Check By: S.G.Prabu 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2025-05-16

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.