இஸ்ரேலின் நாடாளுமன்றத் தேர்தல் 2026 ஒக்டோபர் 27ஆம் திகதி நடைபெற்றது. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிக்குட் கட்சி அதிக ஆசனங்களை (27) பெற்றிருந்தாலும், அவரது கூட்டணிக்கு ஆட்சியமைக்கத் தேவையான 61 ஆசனங்கள் கிடைக்கவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தச் சூழலில் தற்போது நெதன்யாகு மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து இரு வெவ்வேறு காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.
எனவே அந்த காணொளிகள் தொடர்பான உண்மையை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):
Claim – 1
Claim – 2
டெல் அவிவ்வில் நெதன்யாகு மீது மிகவும் ஆபத்தான தாக்குதல், அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து இந்த காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட கூற்று:
நெதன்யாகுவின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பகிரப்படும் காணொளிகள் உண்மையா என்பது தொடர்பிலேயே ஃபேக்ட் கிரஸ்டோ இங்கு ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது.
Fact Check (உண்மை அறிவோம்)
Claim – 1
முதலாவது காணொளியை நாம் பார்க்கும் போது, ஒருவர் மேடையில் ஏறி, உரையாற்றிக் கொண்டிருந்த நபரை நோக்கித் துப்பாக்கியை நீட்டுவதும், பின்னர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவரைச் சுற்றி வளைப்பதும் இந்தக் காணொளியில் உள்ளது.
இதுபோன்று உண்மையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் மீது நடந்திருந்தால் அது தொடர்பில் சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கும் எனினும் நாம் மேற்கொண்ட ஆய்வில் அவ்வாறான எந்த செய்திகளும் வெளியாகியிருக்கவில்லை.
மாறாக, தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் 2026 ஒக்டோபர் 28ஆம் திகதி ஜெருசலேமில் உள்ள லிக்குட் கட்சித் தலைமையகத்தில் நெதன்யாகு தனது ஆதரவாளர்களிடம் உரையாற்றியதை AP புகைப்படங்கள் காட்டுகின்றன. ஒக்டோபர் 29ஆம் திகதி, “இஸ்ரேலில் தேர்தல் திருடப்பட்டுள்ளது” எனக் குற்றம் சாட்டி அவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் அவர் காயமடைந்ததாகவோ அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவோ நம்பகமான எந்தச் செய்தியும் இல்லை.
எனவே நாம் இந்த காணொளியின் காட்சிகளை ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்தி ஆய்வு செய்த போது, 2013 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் திகதி BBC செய்திச் சேவையில் இந்த காணொளி வெளியாகியிருந்தமையை காணமுடிந்தது.

குறித்த செய்தியின் அடிப்படையில் 2013 ஜனவரி 19ஆம் திகதி பல்கேரிய அரசியல்வாதி அகமது டோகன் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, ஒருவர் துப்பாக்கியுடன் மேடையை அணுகி தாக்க முயன்றுள்ளார் இதன்போது துப்பாக்கி வெடிக்காததால் டோகன் காயமின்றித் தப்பியுள்ளார். இந்தச் சம்பவத்தின் காணொளியே தற்போது நெதன்யாகு மீதான தாக்குதலாகப் பகிரப்படுகிறது. Link
அந்தக் காணொளியில் உரையாற்றுபவர் முன்னால் உள்ள மேடையில் “ДПС” என்ற சிரிலிக் எழுத்துகள் தெரிகின்றன. இது பல்கேரியாவின் MRF கட்சியின் பல்கேரிய மொழிச் சுருக்கப்பெயர் என சில சர்வதேச ஊடக நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

மேலும் இது தொடர்பில் பல சர்வதேச உண்மைக் கண்டறியும் நிறுவனங்களும் அறிக்கையிட்டிருப்பது குறிப்படத்தக்கது. Link | Link
இதே பல்கேரிய காணொளி 2024 நவம்பரிலும் 2026 ஏப்ரலிலும் “இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நெதன்யாகு தாக்கப்பட்டார்” எனப் பகிரப்பட்டபோது, ஃபேக்ட் கிரஸண்டோவும் அதன் உண்மை தொடர்பில் அறிக்கையிட்டிருந்தது. (2024 | 2026).
உண்மை சம்பவத்தின் பின்னணி
பல்கேரியாவின் “உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கான இயக்கம்” (MRF) கட்சியின் தலைவரான டோகன், 2013 ஜனவரி 19ஆம் திகதி நேரலையாக ஒளிபரப்பான உரையின்போது இடம்பெற்ற தாக்குதலிலிருந்து தப்பியுள்ளார். ஒருவர் மேடையில் ஏறி அவரது தலைக்கு நேராகத் துப்பாக்கியை நீட்டினார். 25 வயதான ஒக்தாய் எனிமெஹ்மெடோவ் (Oktai Enimehmedov) என்ற அந்தத் தாக்குதல்தாரியிடம் இரண்டு கத்திகளும் இருந்ததாகப் பொலிஸார் குறிப்பிட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
2013 ஜனவரி 20ஆம் திகதி BBC வெளியிட்ட செய்தி அறிக்கையிலும் இதே காணொளி இடம்பெற்றுள்ளது. அந்த செய்தியின்படி, பல்கேரிய தலைநகரான சோபியாவில் நடைபெற்ற MRF கட்சியின் தேசிய மாநாட்டின்போது இந்த சம்பவம் இடம்பெற்றது. இத்தாக்குதலில் டோகனுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது.Link
எனவே இந்த ஊடக அறிக்கைகள் அனைத்தும், குறித்த காணொளி பல்கேரியாவைச் சேர்ந்தது என்பதையும், அதில் இருப்பவர் நெதன்யாகு அல்ல என்பதையும் உறுதிப்படுத்துகின்றன.
எனவே நெதன்யாகு மீது அண்மையில் தாக்குதல் நடத்தப்பட்டதாகப் பரவும் காணொளி தவறானது என்பதுடன் அது 2013ஆம் பல்கேரிய அரசியல்வாதி அகமது டோகன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் முயற்சியின் போது எடுக்கப்பட்ட பழைய காணொளியாகும். மேலும் இதன்போது நெதன்யாகு பலத்த காயமடைந்தார் அல்லது அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார் என்பதற்கும் நம்பகமான ஆதாரங்கள் எதுவும் இல்லை.
Claim – 2
மேலும் இரண்டாவதாக பகிரப்பட்ட காணொளியும் நெதன்யாகு மீது டெல் அவிவ்வில் வைத்து கடுமையான தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவித்தே பகிரப்பட்டிருந்தது. அத்துடன் அந்த காணொளியை நாம் அவதானிக்கும் போது அது ஒரு நாடாளுமன்றம் போன்ற இடத்தில் இடம்பெற்ற கலவரம் போன்றே தென்பட்டது. ஆகவே நாம் இந்த காணொளியின் சில காட்சிகளையும் புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்தி ஆய்வினை மேற்கொண்டிருந்தோம்.
இதன்போது கடந்த 2026.10.29 ஆம் திகதி அர்மேனியா நாட்டின் நாடாளுமன்றத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே இடம்பெற்ற மோதலின் போது எடுக்கப்பட்ட காணொளி என்பதனை அறிய முடிந்தது.
மேலும் சர்வதேச ஊடகங்களும் இந்த காணொளியை வெளியிட்டிருந்தன.Link | Link
உண்மையான சம்பவத்தின் பின்னணி
அர்மேனியா நாடாளுமன்றத்தில் கடந்த ஒரு மாதத்திற்குள் மூன்றாவது முறையாக மோதல் வெடித்துள்ளது. எதிர்க்கட்சியான ‘ஸ்ட்ராங் அர்மேனியா’ (Strong Armenia) கட்சி முன்மொழிந்த ‘பாலியல் அமைச்சகம்’ (Ministry of Sex) தொடர்பான யோசனையைச் சுற்றியே ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
நடுத்தர வயதுடைய பெண்களுக்குப் பாலியல் திருப்தி இல்லாததே அவர்கள் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்குக் காரணமாக இருப்பதாகக் கூறி, இந்த அமைச்சகத்தை உருவாக்க வேண்டும் என்ற யோசனையை எதிர்க்கட்சியினர் முன்வைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வியாழக்கிழமை (ஒக்டோபர் 29), இந்த யோசனை தொடர்பாகப் பெண்களிடம் மன்னிப்புக் கோருமாறு ஸ்ட்ராங் ஆர்மீனியா கட்சியின் தலைவர் நரேக் கராபெத்தியனிடம் (Narek Karapetyan) ஆளும் சிவில் ஒப்பந்தக் கட்சி (Civil Contract Party) கோரியது.
இதனால், ஏற்கனவே மோதல்களுக்குப் பெயர்பெற்ற அர்மேனியா நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டடுள்ளது.
அதனடிப்படிடையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது டெல் அவிவ்வில் வைத்து கடும் தாக்குதல் நடப்பட்டதக தெரிவித்து பகிரப்படும் கணொளியானது தவறானது என்படுதுடன் அது அர்மேனியா நாட்டின் நாடாளுமன்றத்தில் ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களிடையே ஏற்பட்ட கைகலப்பின் போது எடுக்கப்பட்ட காணொளி என்பது உறுதியாகின்றது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube
Conclusion: முடிவு
எனவே, எமது ஆய்வின் அடிப்படையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது கடும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துப் பகிரப்படும் இரு காணொளிகளும் தவறானவை. ஒரு காணொளி 2013ஆம் ஆண்டு பல்கேரியாவில் அகமது டோகன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் முயற்சியின் பழைய காணொளி; மற்றையது 2026 ஒக்டோபர் 29ஆம் திகதி அர்மேனிய நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட மோதலின் காணொளி என்பதுவும் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் நெதன்யாகு காயமடைந்ததாகவோ, அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவோ நம்பகமான எந்தச் செய்தியும் இல்லை என்பதுடன் தேர்தலுக்குப் பின்னர் அவர் பொதுவெளியில் செயற்பட்டு வருகிறார் என்பது சர்வதேச ஊடக அறிக்கைகளின் ஊடாக தெளிவாகின்றது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.


