Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பங்களாதேஷ் பிரஜைகளின் காணொளிகளா இவை?

    කරුණු විමර්ශනය කිරීම
    2026-10-24
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    Subscribe to our WhatsApp Channel பங்களாதேஷ் பிரஜைகளுக்கு சவுதி அரேபியாவில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டமையை தொடர்ந்து பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றமையை எம்மால் காணமுடிந்தது. அந்தவகையில் தற்போது, மரண தண்டனை விதிக்கப்பட்ட பங்களாதேஷ் பிரஜைகள்

    Subscribe to our WhatsApp Channel

    பங்களாதேஷ் பிரஜைகளுக்கு சவுதி அரேபியாவில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டமையை தொடர்ந்து பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றமையை எம்மால் காணமுடிந்தது.

    அந்தவகையில் தற்போது, மரண தண்டனை விதிக்கப்பட்ட பங்களாதேஷ் பிரஜைகள் தம்பதிகள் எனவும் அவர்கள் மக்காவில் இருப்பதனை காட்டும் புகைப்படம் மற்றும் காணொளி ஒன்றும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.

    எனவே அது குறித்த உண்மையை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

    தகவலின்விவரம் (What is the claim):


    Claim 01


    Facebook | Archived Link

    குறித்த பதிவில் எவ்வளவு கனவுகளுடன் பயணித்து இருப்பார்கள் இருவரும் 

    அன்பின் வெளிப்பாடானா ஒரு முத்தத்திற்கு

    கொலைத்தண்டனையா…..?

    இப்படி ஒரு தண்டனை கொடுத்தது சரிதான் என்று முட்டுக்கொடுக்கும் சிலர்….

    மனிதனாக மாறுங்கடா…..

    மனிதனை நேசியுங்கள்…

    #மனிதம்வாழட்டும் என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளி 2026.10.21 ஆம் திகதி சமூக ஊடகங்களில்பகிரப்பட்டிருந்தது.

    Claim 02


    Fb 


    நெற்றியில் முத்தமிட்டால் மரண தண்டனையா என தெரிவிக்கப்பட்டு இந்த காணொளியானது 2026.10.20 ஆம் திகதி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது.

    ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட கூற்று

    மேற்குறிப்பிட்ட காணொளி மற்றும் புகைப்படத்தில் இருப்பவர்கள் உண்மையில் சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரஜைகளா என்பதுவும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட குறித்த பிரஜைகள் உண்மையில் தம்பதிகளா என்பது தொடர்பிலான விடயங்களே இங்கு ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

    Fact Check (உண்மை அறிவோம்)

    Claim 01

    பங்களாதேஷில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக எங்கும் அறிவிக்கப்படவில்லை என்பதுடன் அவர்கள் உண்மையில் திருமணமான தம்பிதிகள் அல்ல எனவும், அவர்கள் புனித மக்கா நகரில் குறிப்பிட்டு எந்த வழிப்பாட்டுத் தளத்தில் தகாத செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள் என்பது தொடர்பில் இதுவரை தெளிவாக குறிப்பிடப்படவில்லை.

    அவ்வாறான நிலையில் மேற்குறிப்பிட்ட் முதலாவது புகைப்படத்தில் இருப்பவர்கள் புனித மக்கா வணக்கஸ்தலத்திற்கு அருகில் இருக்கும் போதே அந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

    எனவே நாம் அந்த படத்தினை ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்தி ஆய்வினை மேற்கொண்ட போது, அந்த புகைப்படமானது ஒரு காணொளியின் காட்சிகள் என்பதுடன் அந்த காணொளி, khadijabelgoum என்ற இன்ஸ்டகிராம் பக்கத்தில் குறித்த காணொளி கடந்த ஆகஸட் மாதம் 7 ஆம் திகதி பகிரப்பட்டிருந்தது.

    மேலும் அந்த காணொளி பிரபல vlogger ஆன  கதீஜா பெல்கூம் (Khadija Belgoum) என்பவரால், இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டிருந்ததுடன், அந்தப் பதிவில், தனது கணவருக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில், தான் கர்ப்பமாக இருப்பதை மக்காவில் வைத்து அவருக்குத் தெரியப்படுத்தியதாகவும், அதன்போது அவரது கணவரின் எதிர்வினையைப் பதிவு செய்வதே தனது நோக்கமாக இருந்ததாகவும் பெல்கூம் குறிப்பிட்டிருந்தார்.

    மேலும், இவர்களது காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அவற்றை மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பங்களாதேஷ் தம்பதியினருடன் தொடர்புபடுத்திப் பரப்பப்பட்ட தவறான தகவல்களையும் பெல்கூம் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகள் மூலம் மறுத்திருந்தார்.

    குறித்த காணொளியை பதிவிட்ட பின்னர் அவர்கள் பதிவிட்டிருந்த அடுத்தடுத்த காணொளிகளை பார்க்கும்போது அவர்கள் மக்காவில் இருந்து பதிவிட்ட பல காணொளிகளையும் காணமுடிந்தது.

    அதனடிப்படையில் சமூக ஊடகங்களில், மரண தண்டனை  நிறைவேற்றப்பட்ட பங்களாதேஷ் பிரஜைகள் என பகிரப்பட்ட காணொளியானது தவறானது என்பது தெளிவாகின்றது.

    Claim 02

    இரண்டாவதாக பகிரப்பட்ட காணொளியின் சில காட்சிகளை நாம் புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்தி ஆய்வினை மேற்கொண்டபோது, குறித்த காணொளி கடந்த 2026.08.18 ஆம் திகதி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது.

    “சொர்க்கம் வரை நண்பர்கள்“ என குறிப்பிட்டே அந்த காணொளி பகிரப்பட்டிருந்தது. அத்துடன் அந்த காணொளியின் மேலே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் என தெரவித்து பகிரப்பட்ட இரண்டு புகைப்படங்களும் செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டவை என்பதுவும் எமது ஆய்வுகளின் போது கண்டறியப்பட்டது.

    சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இரண்டு பங்களாதேஷ் பிரஜைகள்: முக்கிய தகவல்களின் சுருக்கம்

    சவூதி அரேபியாவின் மக்கா நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் ஒழுக்கமற்ற செயலில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இரண்டு பங்களாதேஷ் பிரஜைகளுக்கு 2026 ஒக்டோபர் 14ஆம் திகதி, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சவூதி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.News Link 

    மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் யார்?

    ஊடக அறிக்கைகளின்படி, மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இருவரும்:

    • நஸ்ருல் இஸ்லாம் அப்துல் பஷீர் (Nazrul Islam Abdul Basir) — பங்களாதேஷின் பிராமன்பாரியா (Brahmanbaria) பகுதியைச் சேர்ந்தவர்.
    • ஸ்வீட்டி அக்தர் (Sweety Akhtar) — பங்களாதேஷின் டாங்காயில் (Tangail) பகுதியைச் சேர்ந்தவர். சில அறிக்கைகளில் இவரது பெயர் Siti Akhtar அல்லது Sweety Akter எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இருவரும் சவூதி அரேபியாவில் பணிபுரிந்த புலம்பெயர் தொழிலாளர்கள் என பங்களாதேஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Link

    எதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது?

    சவூதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, மக்காவில் உள்ள ஒரு பள்ளிவாசலுக்குள் ஒழுக்கமற்ற செயலில் ஈடுபட்டதாக இருவரும் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டனர்.

    அவர்களுக்கு இஸ்லாமியச் சட்டத்தின் கீழ் தஅஸீர் (Ta’zir) எனப்படும் நீதிமன்றத்தின் விருப்ப அதிகாரத்துக்கு உட்பட்ட தண்டனை முறையின் அடிப்படையில் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக அந்த அறிவிப்பு தெரிவித்தது.

    எனினும், குற்றமாகக் கருதப்பட்ட குறிப்பிட்ட செயல் என்ன, அது எந்தப் பள்ளிவாசலில் நடைபெற்றது, சம்பவம் நடந்த திகதி என்ன, விசாரணையில் முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் எவை போன்ற விவரங்களை சவூதி அதிகாரிகள் பொதுவெளியில் வெளியிடவில்லை என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.Link

    கைது செய்யப்பட்ட திகதியும் பின்னணியும்

    பங்களாதேஷ் தூதரகத்தின் ஜெத்தா அலுவலகம் பெற்றிருந்த கைதிகள் பட்டியல் தொடர்பாக வெளியான அறிக்கையின்படி:

    • நஸ்ருல் இஸ்லாம் அப்துல் பஷீர் 2023 ஓகஸ்ட் 1ஆம் திகதி சவூதி அரேபியாவின் இணையக் குற்றச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
    • ஸ்வீட்டி அக்தர் 2023 ஓகஸ்ட் 2ஆம் திகதி விபச்சாரம் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
    • இருவரும் அல் மஜால் (Al Majal) நிறுவனத்தில் துப்புரவுப் பணியாளர்களாகப் பணியாற்றியதாகவும், ஜெத்தாவில் வெவ்வேறு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முக்கியமாக, தூதரகத்துக்குக் கிடைத்த கைதிகள் பட்டியலில் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடப்படவில்லை. மேலும், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கும் பள்ளிவாசலில் ஒழுக்கமற்ற செயலில் ஈடுபட்டதாக சவூதி அதிகாரிகள் தெரிவித்த குற்றச்சாட்டுக்கும் இடையிலான தொடர்பு தெளிவுபடுத்தப்படவில்லை. Link

    அவர்கள் கணவன்–மனைவியா?

    சமூக வலைத்தளங்களில் இருவரும் கணவன்–மனைவி என்றும், உம்ரா யாத்திரைக்காக மக்கா சென்றிருந்தபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகவும் சில பதிவுகள் பகிரப்பட்டன.

    ஆனால், பங்களாதேஷ் ஊடகங்களின் செய்திகளின்படி, நஸ்ருலின் தந்தை தனது மகன் திருமணமாகாதவர் என்றும், ஸ்வீட்டி தனது மகனின் மனைவி அல்ல என்றும் தெரிவித்துள்ளார். இரு குடும்பங்களும் அவர்கள் தனித்தனியாக வேலைக்காக சவூதி அரேபியா சென்றதாகக் கூறியுள்ளன.

    எனவே, அவர்கள் கணவன்–மனைவி என்ற சமூக வலைத்தளக் கூற்றுக்கு நம்பகமான ஆதாரம் இல்லை. Link

    பங்களாதேஷ் அரசாங்கத்தின் நடவடிக்கை என்ன?

    பங்களாதேஷ் அதிகாரிகளின் கூற்றுப்படி, மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் தமது அரசாங்கத்திற்கோ சவூதி அரேபியாவிலுள்ள பங்களாதேஷ் தூதரகத்திற்கோ உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

    இந்த விவகாரம் தொடர்பாக பங்களாதேஷ் அரசாங்கம் சவூதி அதிகாரிகளிடம் விளக்கம் கோரியுள்ளது. இருவருக்கும் எதிரான வழக்குகளின் விபரங்கள், நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் தொடர்பான ஆவணங்களையும் கோரியுள்ளது.

    மேலும், மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் உடல்களைப் பங்களாதேஷுக்குக் கொண்டுவருவது தொடர்பான நடவடிக்கைகள், சவூதி அரேபியாவிடமிருந்து பதில் கிடைத்த பின்னர் மேற்கொள்ளப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

    எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  |TikTok | Youtube


    Conclusion: முடிவு

    எனவே எமது ஆய்வின் அடிப்படையில் சவுதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பங்களாதேஷ் பிரஜைகள் இருவரும் கணவன்–மனைவி என, சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் காணொளிகள் தவறானவை என்பதுடன் அந்த காணொளியில் இருப்பவர்கள் குறித்த பங்களாதேஷ் பிரஜைகள் அல்ல என்பதுவும் கண்டறியப்பட்டுள்ளது.


    சவுதி அரேபியாவில் 2026 ஒக்டோபர் 14ஆம் திகதி இரண்டு பங்களாதேஷ் பிரஜைகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். எனினும், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள், கைது செய்யப்பட்ட பின்னணி மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பாகப் பல கேள்விகள் இன்னும் தெளிவுபடுத்தப்பட வேண்டியுள்ளன. 

    அதேபோன்று குறித்த பங்களாதேஷ் பிரஜைகள் இருவரும் தம்பதிகள் அல்ல என அவர்களின் குடும்பத்தார்  அறிவித்ததாக சர்வதேச ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளதுடன் அவர்கள் தம்பதிகள் என்று கூறுவதற்கான நம்பகமான ஆதாரங்கள் எதுவும் இல்லை. 

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SS

    Suji Shabeedhran

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2026-10-24

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.