Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    அர்ஜென்டினாவில் AI Traffic Light என பகிரப்படும் காணொளி உண்மையானதா..?

    කරුණු විමර්ශනය කිරීම
    2025-09-18
    3 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO : அர்ஜென்டினாவில் உள்ள இந்த AI Traffic Light என ஒரு வீடியோ சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண


    INTRO :

    அர்ஜென்டினாவில் உள்ள இந்த AI Traffic Light என ஒரு வீடியோ சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத்தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின்விவரம் (What is the claim):

     Facebook Link  | Archived Link


    சமூகவலைத்தளங்களில் “ 

    ஹெல்மெட் இல்லையெனில் பச்சை grume!

    அர்ஜென்டினாவில் உள்ள இந்த AI ட்ராஃபிக் லைட், பைக் ஓட்டுநர் ஹெல்மெட் அணியாமல் இருந்தால் பச்சையாக மாறாது!

    Let’s grow together — more exciting content on the way! 🚀

    @thanthiulagam

    #TrafficSafety #HelmetOn #AItechnology #BikeSafety #RoadSafety #ArgentinaNews #SmartTrafficLight #Innovation #BreakingNews #TrendingNow “என இம் மாதம் 12 ஆம் திகதி 2025 ஆம்ஆண்டு  (12.09.2025) பதிவேற்றம்செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து பலர்பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    காணொளியில் கூறப்பட்டுள்ளவாறு அர்ஜென்டினாவில் போக்குவரத்து சமிக்ஞைகள் செயற்கை நுண்ணறிவு வசதியினை பயன்படுத்தி வருவது தொடர்பாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளதா என ஆய்வு செய்தபோது அவ்வாறு எவ்விதமான செய்தியும் வெளியாகி இருக்கவில்லை.

    இணையத்தில் பகிரப்பட்டுள்ள குறித்த காணொளியினை புகைப்படங்களாக மாற்றி நாம் ஆய்வு செய்தபோது Honda நிறுவனத்திற்கு அர்ஜென்டினாவின் விளம்பர நிறுவனமான அல்மாசெனால் உருவாக்கப்பட்ட விழிப்புணர்வு விளம்பர காணொளி இது என்பது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக GIGadgets பேஸ்புக் பக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் பதிவிட்ட பதவும் எமக்கு கிடைக்கப்பெற்றது.

    மேலும் நாம் தேடலில் ஈடுப்பட்ட போது, அல்மாசெனால் என்ற நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட இந்த விழிப்புணர்வு விளம்பரம் பெரும் வெற்றி பெற்றுள்ளமை தொடர்பாக அவர்களின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் அவர்கள் பதிவிட்டிருந்த பதிவும் எமக்கு கிடைக்கப்பெற்றது.Article Link

    குறித்த விளம்பரம் தொடர்பாக இணையத்தில் பகிரப்பட்ட செய்தி அறிக்கைகளும் எமது ஆய்வின் போது காணக்கிடைத்தது. Link 1 |Link 2

    இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வில், அர்ஜென்டினாவில் AI Traffic Light என பரவும் வீடியோ Honda நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஒரு விழிப்புணர்வு விளம்பர காணொளி என்பது கண்டறியப்பட்டது.

    எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  |TikTok| Youtube

    Conclusion: முடிவு


    எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

    Avatar

    Title:அர்ஜென்டினாவில் AI Traffic Light என பகிரப்படும் காணொளி உண்மையானதா..?

    Fact Check By: S.G.Prabu 

    Result: Misleading

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2025-09-18

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.