Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    ரீசார்ஜ் அட்டையை விரல் நகத்தினால் சுரண்டுவதால் புற்றுநோய் ஏற்படுமா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2025-05-13
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    தற்காலத்தில் கையடக்க தொலைபேசி பாவனை என்பது நம் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது என்றே கூற வேண்டும். அதேபோன்று கையடக்க தொலைபேசி பாவனை மற்றும் அது சார்ந்த விடயங்கள் தொடர்பில் சமூகத்தில் பல்வேறு தகவல்களும் பகிரப்பட்டே வருகின்றன.  அந்த வகையில் தற்போது

    தற்காலத்தில் கையடக்க தொலைபேசி பாவனை என்பது நம் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது என்றே கூற வேண்டும். அதேபோன்று கையடக்க தொலைபேசி பாவனை மற்றும் அது சார்ந்த விடயங்கள் தொடர்பில் சமூகத்தில் பல்வேறு தகவல்களும் பகிரப்பட்டே வருகின்றன. 

    அந்த வகையில் தற்போது கையடக்கத் தொலைபேசிகளுக்கு பயன்படுத்தப்படும் ரீசார்ஜ் கார்டில் உள்ள வெள்ளி நிறத்திலான பகுதியை விரல் நகத்தினால் சுரண்டுவதனால் புற்றுநோய் ஏற்படும் என தெரிவிக்கப்பட்ட தகவல்கள் சமூக ஊடகங்கள் வழியாக பல வருடங்களாக பகிரப்பட்டு வருவதனை எம்மால் காணமுடிந்தது.

    எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

    தகவலின் விவரம் (What is the claim)

    Facebook | Archived Link

    குறித்த பதிவில் சில்வர் நைட்ரோ ஆக்சைடால் மனிதர்களுக்கு ஏற்படும் புதிய புற்றுநோயை அமெரிக்காவில் உள்ள மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

    நீங்கள் ரீசார்ஜ் கார்டுகளை வாங்கும் போதெல்லாம், உங்கள் நகங்களால் கீற வேண்டாம், ஏனெனில் அதில் சில்வர் நைட்ரோ ஆக்சைடு பூச்சு உள்ளது மற்றும் தோல் புற்றுநோயை உண்டாக்கும்.

    இந்த செய்தியை உங்கள் அன்புக்குரியவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    *முக்கிய ஆரோக்கிய குறிப்புகள்:*

    1. தொலைபேசி அழைப்புகளுக்கு இடது காது மூலம் பதிலளிக்கவும்.

    2. குளிர்ந்த நீருடன் உங்கள் மருந்தை உட்கொள்ளாதீர்கள்….

    3. மாலை 5 மணிக்கு மேல் கனமான உணவுகளை உண்ணாதீர்கள்.

    4. காலையில் அதிகமாகவும், இரவில் குறைவாகவும் தண்ணீர் குடிக்கவும்.

    5. சிறந்த தூக்க நேரம் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை.

    6. மருந்தை உட்கொண்ட பிறகு அல்லது உணவுக்குப் பிறகு உடனடியாகப் படுக்காதீர்கள்.

    7. போனின் பேட்டரி கடைசி பட்டியில் குறைவாக இருக்கும் போது, ​​ஃபோனுக்கு பதில் சொல்ல வேண்டாம், ஏனெனில் கதிர்வீச்சு 1000 மடங்கு வலிமையானது. என தெரிவிக்கப்பட்டு கடந்த 2022.01.28 பகரப்பட்டிருந்தது

    எனினும் தற்போது வரை இதன் உண்மை அறியாத பலரும் சமூக ஊடகங்களில் அதனை பகிர்ந்து வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    எனவே நாம் முதலில் ரீசார்ஜ் கார்ட்களிலுள்ள சுரண்டும் பகுதியில் சில்வர் நைட்ரோ ஒக்சைட் என்ற வேதிப்பொருள் காணப்படுகின்றமை தொடர்பில் ஏதேனும் ஆய்வறிக்கைகள் உள்ளதா என ஆராய்ந்த போது அவ்வாறான எந்தவொரு அறிக்கைகளும் எமக்கு கிடைக்கவில்லை.

    எனவே இது தொடர்பில் நாம் மேலும் ஆராய்ந்த போது அந்தப் பகுதியில் பல மிக நுண்ணிய அடுக்குகள் காணப்படுவதாகவும், அந்த அடுக்குகளின் கலவையில், ​​உலோகச் சேர்மங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

    உதாரணமாக –  டைட்டானியம், இரும்பு, பொட்டாசியம் மற்றும் தகரம் போன்ற உலோக தனிம சேர்மங்கள் இருப்பதை வேதியியல் பகுப்பாய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. 

    மேலும் உலோகமற்ற பொஸ்பரஸ் மற்றும் கந்தகம் ஆகியவையும் அதில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

    மேலும் யுரேனியம், தோரியம், பொலோனியம் போன்ற கதிரியக்கத் தனிமங்களோ அல்லது பிற தனிமங்களின் கதிரியக்க கூறுகளோ இதில் இல்லை. எனவே, ரீசார்ஜ் கார்டின் வெள்ளி நிற பகுதியை சுரண்டுவதனால் தோல் புற்றுநோயை ஏற்படுத்தும் என்ற கருத்து மறுக்கப்படுகிறது.

    இருப்பினும், இந்த இரசாயனங்கள் பிற உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. இந்த இரசாயனங்கள் உணவுச் சங்கிலி வழியாக அவை உடலுக்குள் செல்லக்கூடும், எனவே  இந்த ஆபத்தைக் குறைக்க, உங்கள் விரல் நகங்களால் அந்த பகுதியை சுரண்டுவதற்குப் பதிலாக ஒரு சிறிய கத்தி அல்லது கத்தரிக்கோலைப் பயன்படுத்துவது நல்லது,  நீங்கள் உங்கள் விரல் நகங்களால் அவற்றை சுரண்டினால் உடனடியாக உங்கள் கைவிரல் நகங்களை கழுவுவது உடல் நலத்திற்கு நன்மையாக அமையும்.

    குறித்த ரிசார்ஜ் கார்ட்களில் காணப்படும் வேதியியல் கலவை தொடர்பில் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும். Link

    மருத்துவ நிலைப்பாடு

    American Cancer Society எனும் சங்கத்தின் பிரதான வைத்திய மற்றும் ஆராய்ச்சி அதிகாரி வைத்தியர்  William Cancer, இந்த ரிசார்ஜ் கார்டின் வெள்ளி நிறப் பகுதியில் புற்றுநோயை ஏற்படுத்தும் கலவைகள் எதுவும் இல்லை என பிரான்ஸ் செய்திச் சேவையொன்றிற்கு தெரிவித்துள்ளார்.Link | Archived

    இது குறித்து நாம் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் வினவினோம். இதன்போது இதுவரை நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் இந்த வகையான கலவைகள் மூலம் புற்றுநோய் ஏற்படுவதற்கான எந்த அறிவியல் ஆதாரமும் கிடைக்கவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

    சில்வர் நைட்ரஸ் ஒக்சைட் என்ற வேதியியல் சேர்மம்

    அமெரிக்க சுகாதாரத் துறையின் முதன்மை ஆராய்ச்சிப் பிரிவான தேசிய சுகாதார நிறுவனத்தின் (National Institute of Health)  தரவைப் பயன்படுத்தி, சில்வர் நைட்ரஸ் ஒக்சைட் எனப்படும் ஒரு சேர்மத்தின் இருப்பு மற்றும் அதன் வேதியியல் மற்றும் இயற்பியல் பண்புகளை நாங்கள் ஆய்வு செய்தோம். இருப்பினும் அங்கு அப்படி ஒரு கலவை இருப்பதற்கான எந்த தரவுகளும் காணப்படவில்லை. இது குறித்து நீங்களும் அந்த இணையதளம் ஊடாக ஆராய்ந்து பார்க்க முடியும். Link 

    இருப்பினும், சில்வர் மற்றும் நைட்ரிக் அமிலத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் சில்வர் நைட்ரேட்டில் ஒக்சைட்கள் காணப்படுகின்றன. சில்வர் நைட்ரேட் பற்றிய விபரங்களை அறிந்துகொள்ளவும். Link

    இதனை நீண்ட நேரம் வெளிப்படுவதால் கண்கள் மற்றும் தோலில் சில ஒவ்வாமை எதிர்வினைகள் ஏற்படலாம், அத்துடன் தலைவலி, தலைச்சுற்றல், குமட்டல் மற்றும் வாந்தியும் ஏற்படலாம். ஆனால் ரீசார்ஜ் அட்டையின் சுரண்டும் கூறு இல்லை.

    சாதாரண சூழ்நிலையில், கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் காணப்படுகின்றதா?

    இது குறித்து பல கருத்துக்கள் உள்ளன, மேலும் wireless  தொடர்பை அடைய பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. கையடக்கத் தொலைபேசிகள்  ரேடியோ அதிர்வெண் மின்காந்த புலங்களை (RF-EMF) பயன்படுத்துகின்றன.

    2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், உலகளவில் 8 பில்லியனுக்கும் அதிகமான கையடக்கத் தொலைபேசி பயன்பாடுகள் (subscriptions) காணப்பட்டன , மேலும் சாதாரண சூழ்நிலைகளில், கையடக்க தொலைபேசிகளின் பயன்பாடு brain tumors அபாயத்தை அதிகரிக்காது என்றும் ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. Link

    தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டம்

    சமீபத்தில், தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் இலங்கையில் சோதனைகளை நடத்தி 32 வகையான புற்றுநோய்களை அடையாளம் கண்டுள்ளது. இதுவரை நடத்தப்பட்ட சோதனைத் தரவுகளின்படி, WHO  நடத்திய சோதனைகளில்  உலகில் 121 வகையான  புற்றுநோய்களை அடையாளம் கண்டுள்ளது, அவற்றில், சில்வர் நைட்ரஸ் ஒக்சைட் கலவையினால் புற்றுநோய் ஏற்பட்டமை தொடர்பில் எந்த ஆதாரங்களும் இல்லை என புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்தது. 

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion (முடிவு)

    எனவே எமது ஆய்வின் அடிப்படையில் , சில்வர் நைட்ரஸ் ஒக்சைட் எனப்படும் எந்த வேதியியல் சேர்மமோ அல்லது புற்றுநோயை ஏற்படுத்தும் காரணியோ இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    இருப்பினும், ரீசார்ஜ் கார்டை சுரண்டுவதனால் விரல்களில் படியும் இரசாயனக் கூறுகள் நாம் சாப்பிடும் போது நமது உடலுக்குள் சென்று பிற உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதால், ரீசார்ஜ் அடடையை சுரண்டுவதற்கு உங்கள் விரல் நகத்திற்குப் பதிலாக பிளேட், நாணயம் அல்லது ஒரு சிறிய கத்தரிக்கோல் முனை போன்றவற்றைப் பயன்படுத்துவது நன்மை பயக்கும்.

    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title: ரீசார்ஜ் அட்டையை விரல் நகத்தினால் சுரண்டுவதால் புற்றுநோய் ஏற்படுமா?

    Fact Check By: suji shabeedharan 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SS

    Suji Shabeedhran

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2025-05-13

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.