Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    சஜித்துடன் பேராசிரியை மெத்திகா விதானகே இணைந்தாரா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2024-09-08
    2 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவுடன் பேராசிரியரான மெத்திகா விதானகே இணைந்ததாக ஒரு புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில்

    ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவுடன் பேராசிரியரான மெத்திகா விதானகே இணைந்ததாக ஒரு புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):


    Facebook Link
    | Archived Link

    சமூகவலைத்தளங்களில் “ உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) அறிவுறுத்தல்களையே நிராகரித்து முஸ்லிம் ஜனாஸா எரிப்புக்கு அனுமதி வழங்கிய இனவாதி Dr.Methika Vithanage வேட்பாளர். சஜித் அவர்களுடன் இணைவு. “ என இம் மாதம் 04 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு  (04.09.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் பல போலியான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைக்கின்றது.

    ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச உடன் பேராசிரியரான மெத்திகா விதானகே இணைந்ததாக பரவும் புகைப்படத்தினை நாம் ரிவஸ் இமேஜீனை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, இது கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி (28.03.2024) தேசிய அடிப்படை ஆய்வுகள் நிறுவனத்தின் ஆராய்ச்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதை கண்டறியப்பட்டது.

    குறித்த புகைப்படத்தினை National Institute of Fundamental Studies அவர்களின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளமை காணக்கிடைத்தது.

    மேலும் நாம் பேராசிரியரான மெத்திகா விதானகே தொடர்புக்கொண்டு இது தொடர்பாக வினவியபோது, இது முற்றிலும் போலியான தகவல் என்றும் குறித்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டு இணையத்தில் பரப்பப்படுவதாகவும் எமக்கு அறியத்தந்தார்.

    நாம் குறித்த புகைப்படத்தின் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவஸ் இமேஜ் பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டோம்.

    இதனை மேலும் உறுதி செய்துக்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப்பிரிவினை தொடர்புக்கொண்டு வினவியபோது, அவர்களும் இது எடிட் செய்யப்பட்டு பரப்பி வருவதாக எமக்கு உறுதிசெய்தனர்.

    இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், சஜித்துடன் பேராசிரியை மெத்திகா விதானகே இணைந்தாக பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு


    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    GP

    Gnana Prabhu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2024-09-08

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.