Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    சஜித்தின் கையில் அநுரவின் விஞ்ஞாபனம் உள்ளதா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2024-09-08
    2 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கான போட்டியிடும் அநுர குமார திஸாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தினை சஜித் பிரேமதாச கையில் வைத்துள்ளதாக ஒரு புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம்

    இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கான போட்டியிடும் அநுர குமார திஸாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தினை சஜித் பிரேமதாச கையில் வைத்துள்ளதாக ஒரு புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):


    Facebook Link
    | Archived Link

    சமூகவலைத்தளங்களில் “ சஜித்தின் கையில் அநுரவின் விஞ்ஞாபனம் “ என இம் மாதம் 04 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு  (04.09.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் அதற்கு கமெண்ட் செய்து பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் பல போலியான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைக்கின்றது.

    அதற்கமைய தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான அநுர குமார திஸாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தினை ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச கையில் வைத்துள்ளதை போன்று ஒரு புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது.

    நாம் குறித்த புகைப்படத்தினை கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்தபோது, கடந்த மாதம் 29 ஆம் திகதி கண்டி, ஸ்ரீ தலதா மாளிகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஐனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் என கண்டறியப்பட்டது.

    <iframe src=”https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fsajithpremadasa%2Fposts%2Fpfbid0X9L2vWC79CN2YsrCN6hsCk2QsVeKogA6HDd41XZdRpMAWoEF2Ch2SRkR44QFhEGhl&show_text=true&width=500″ width=”500″ height=”250″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share”></iframe>

    நாம் சஜித் கையில் அநுரவின் விஞ்ஞாபனம் எனும் பகிரப்படும் புகைப்படத்தினையும், சஜித் தனது விஞ்ஞாபனத்தினை வெளியிட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படத்தினையும் ஆய்வு செய்தபோது, முதலாவது புகைப்படம் எடிட் செய்யப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டது.

    இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், சஜித்தின் கையில் அநுரவின் விஞ்ஞாபனம் என பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டுள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு


    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    GP

    Gnana Prabhu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2024-09-08

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.