Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    <strong>ஜப்பான் தீவு ஒன்றில் சூழ்ந்த ஆயிரக்கணக்கான காகங்கள்- உண்மையா?</strong>

    කරුණු විමර්ශනය කිරීම
    2023-02-27
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :ஜப்பானில் பரபரப்பு, தீவு முழுவதும் சூழ்ந்த ஆயிரக்கணக்கான காகங்கள் என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என

    INTRO :
    ஜப்பானில் பரபரப்பு, தீவு முழுவதும் சூழ்ந்த ஆயிரக்கணக்கான காகங்கள் என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ” ஜப்பானில் பரபரப்பு – தீவு முழுவதும் சூழ்ந்த ஆயிரக்கணக்கான காகங்கள் : இயற்கை பேரழிவுக்கான அறிகுறியா?

    #Virakesari #news #breaking #breakingnews #Japan #crows #crow #Earthquake #tamil #tamilnews #virakesarinews “ என இம் மாதம் 16 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு  (16.02.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    நாம் முதலில் குறித்த வீடியோவில் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி அதனை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி ஆய்வு செய்த போது, இவ்வருடம் ஜனவரி மாதத்தில் குறித்த வீடியோவை மெக்சிகன் நாட்டினை சேர்ந்த செய்தி இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    உண்மைப் பதிவைக் காண: netnoticias.mx I Archived link 

    https://www.tiktok.com/music/sonido-original-7191880359790922501

    நாம் இணையத்தில் ஜப்பானில் நடந்த சம்பவம் என பகிரப்பட்ட வீடியோவை மெக்சிகோவில் பதிவாகிய சம்பவ வீடியோவுடன் ஒப்பிட்டு பார்த்த போது, குறித்த இரு வீடியோக்களும் ஒத்து போகின்றமை காணக்கிடைத்தது.

    மேலும் இது தொடர்பாக நாம் ஆய்வினை மேற்கொண்ட போது, இதே வீடியோ msn.com இணையத்தளத்தில் கடந்த மாதம் 30 ஆம் திகதி “Massive flock of birds gather on single street” என்ற தலைப்பில் பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    அந்த வீடியோவில் இருந்த கார் இலக்கத்தகட்டில் Guanajuato என்ற இடம் குறிப்பிடப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது. இதே பெயர் டிக்டொக் வீடியோவிலும் இருந்தமையும் எம்மால் உறுதி செய்யப்பட்டது. மேலும் குறித்த இடம் எங்கு அமைந்துள்ளது என தேடிய போது, அது மெக்சிக்கோ நாட்டில் அமைந்துள்ள நகரம் என கண்டறியப்பட்டது.

    Google search link

    இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், ஜப்பான் தீவு ஒன்றில் சூழ்ந்த ஆயிரக்கணக்கான காகங்கள் பகிரப்படும் வீடியோ போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு
    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:ஜப்பான் தீவு ஒன்றில் சூழ்ந்த ஆயிரக்கணக்கான காகங்கள்- உண்மையா?

    Fact Check By: S G Prabu 

    Result: Misleading

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2023-02-27

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.