INTRO
உலகளாவிய கவனத்தை ஈர்த்த ‘Walk for Peace’ சமாதான நடைப்பயணத்தின் ஒரு கட்டம் கடந்த ஏப்ரல் மாதம் எமது நாட்டிலும் நடைபெற்றது. வியட்நாம் நாட்டைச் சேர்ந்த தேரர் தலைமையிலான பிக்குகளின் முன்னிலையில் இடம்பெற்ற இந்த அமைதிப் பயணத்தில் இணைந்துகொண்ட ‘ஆலோகா’ எனும் நாயும் எமது நாட்டு மக்களின் விசேட கவனத்தை ஈர்த்திருந்ததுடன், அது பற்றிய நினைவுகள் இன்றும் பலரிடம் நிலைத்திருக்கின்றன.
எவ்வாறாயினும், அமைதிப் பயணத்தில் இணைந்துகொண்ட ஆலோகா இறந்துவிட்டதாகச் சமூக வலைத்தளங்களில் பல்வேறு பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.
எனவே இது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):

உலகுக்கே சமாதானத்தை பகிர்ந்த ஆலோகா மேலோகம் சென்றது என தெரிவிக்கப்பட்டு இந்த பதிவு கடந்த 2026.09.30 ஆம் திகதி பகிரப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
ஆலோகா இலங்கையில் மட்டுமன்றி, “Walk for Peace” சமாதானப் பேரணி நடைபெற்ற ஏனைய நாடுகளின் மக்களிடையிலும், ஒட்டுமொத்த உலக அளவிலும் சிறப்பு கவனத்தை ஈர்த்த ஒரு நாயாகும்.
சமாதானப் பேரணியின் போது இலங்கை ஊடகங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் அதிக கவனத்தைப் பெற்ற ஆலோகா உயிரிழந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்படும் தகவல் உண்மையாக இருந்தால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் குறைந்தபட்சம் அத்தகைய செய்திக்கு தமது ஊடகங்களில் இடமளித்திருக்கும்.
எனினும், நாம் மேற்கொண்ட தேடலின்போது, ஆலோகா உயிரிழந்துவிட்டதாக எந்தவொரு ஊடகமும் செய்தி வெளியிட்டிருப்பது கண்டறியப்படவில்லை.
ஆலோகா உயிரிழந்துவிட்டதாகப் பரவி வரும் பதிவுகளின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துவதற்காக, “Walk for Peace” நிகழ்ச்சியுடன் தொடர்புடைய உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் உத்தியோகபூர்வ Facebook கணக்கு ஆகியவற்றையும் நாம் ஆய்வு செய்தோம். அவற்றிலும் ஆலோகா உயிரிழந்துவிட்டதாக எந்தவொரு அறிவிப்போ அல்லது தகவலோ வெளியிடப்பட்டிருப்பதை காண முடியவில்லை.
மேலும், “Aloka the Peace Dog” என்ற பெயரில் பராமரிக்கப்பட்டு வரும் உத்தியோகபூர்வ Facebook மற்றும் Instagram கணக்குகளிலும் ஆலோகா உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கும் எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவிப்போ அல்லது அதனை உறுதிப்படுத்தும் வகையிலான சமீபத்திய பதிவோ காணப்படவில்லை.
அதேபோன்று, “Aloka the Peace Dog” என்ற உத்தியோகபூர்வ Facebook கணக்கை ஆய்வு செய்தபோது, அதன் Profile Picture மற்றும் Cover Photo ஆகியவற்றில் தொடர்ந்து ஆலோகாவின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளதுடன், அந்தக் கணக்கின் மூலம் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆலோகாவின் புகைப்படங்களும் பதிவிடப்பட்டுள்ளதை காண முடிகிறது.

இதன் அடிப்படையிலும், ஆலோகா உயிரிழந்துவிட்டதாகப் பரவி வரும் பதிவுகளில் உண்மைத் தன்மை இல்லை என்பது தெளிவாகிறது.
இதனையடுத்து நாம் மேற்கொண்ட மேலதிக உண்மைச் சரிபார்ப்பின்போது, இலங்கையின் முன்னணி செய்தி இணையத்தளமொன்று, “Walk for Peace” சமாதானப் பேரணி முழுவதும் பிக்குகளுடன் பயணித்த “ஆலோகா” என்ற சமாதான நாயின் சக நாயான “சோ” (Sổ) உயிரிழந்துவிட்டதாக, கடந்த செப்டம்பர் 26ஆம் திகதி புகைப்படம் ஒன்றுடன் இந்தச் செய்தியை வெளியிட்டிருந்தது. காப்பக இணைப்பு
இதற்கிடையில், குறித்த செய்திக்காகப் பயன்படுத்தப்பட்ட புகைப்படம் மற்றும் ஆலோகா உயிரிழந்துவிட்டதாகக் கூறி சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட பதிவுகளுக்குப் பயன்படுத்தப்பட்ட புகைப்படங்களை Reverse Image Search மூலம் மேலும் ஆய்வு செய்தபோது, அவை “Shen Yu” என்ற பிக்குவால் செப்டம்பர் 26ஆம் திகதி தனது Threads கணக்கில் “சோ” என்ற நாயைப் பற்றி வெளியிடப்பட்ட புகைப்படங்களுடன் கூடிய பதிவிலிருந்து பெறப்பட்டிருக்கலாம் எனக் கருத முடிகிறது.


“Walk for Peace” சமாதானப் நடைப்பயணம் தொடர்பான தகவல்களை வெளியிட்டு வரும் Shen Yu பிக்குவின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், அமெரிக்காவில் நடைபெற்ற “Walk for Peace” சமாதானப் நடைப்பயணத்தில் கலந்துகொண்ட பிக்குகளில் அவரும் ஒருவராவார்.
மேற்குறிப்பிட்ட புகைப்படங்களுடன் அவர் வெளியிட்டிருந்த பதிவின்படி, 2022ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற “Walk for Peace” சமாதானப் நடைப்பயணத்தின் போது, ஆலோகா (Aloka) மற்றும் சோ (So) ஆகிய நாய்கள் பிக்குகளுடன் இணைந்து தாமாகவே நீண்ட தூரம் பயணித்துள்ளன. மேலும், சோ இனிமேல் சமாதானப் பேரணியில் இணையமாட்டார் என்றும், சோ உயிரிழந்துவிட்டதாகவும், சோவை கௌரவமான முறையில் அடக்கம் செய்வதற்கு பிக்குகள் நடவடிக்கை எடுத்ததாகவும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், செப்டம்பர் 26ஆம் திகதி வெளியிடப்பட்ட இந்தப் பதிவில், சோ உயிரிழந்த குறிப்பிட்ட திகதி தொடர்பாக எந்தவொரு தகவலும் குறிப்பிடப்படவில்லை. அத்துடன், சோ சமீபத்தில் உயிரிழந்ததாகவும் அந்தப் பதிவில் குறிப்பிடப்படவில்லை.
இதன் அடிப்படையில், “சோ” என்ற நாய் உயிரிழந்த திகதியைத் துல்லியமாகக் கண்டறிவதற்காக நாம் மேலதிக ஆய்வினை மேற்கொண்டோம். இதன்போது, சமாதானப் பேரணியை வழிநடத்தும் தேரர் உள்ளிட்ட மேலும் சில பிக்குகள் மற்றும் ஆலோகா ஆகியோருடன் சென்று, சோ அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்திற்கு அருகில் சோவை நினைவுகூர்ந்து மதச் சடங்குகளை மேற்கொள்ளும் காட்சிகள் அடங்கிய காணொளி ஒன்று கடந்த ஜூலை 22ஆம் திகதி “Walk for Peace” உத்தியோகபூர்வ Facebook கணக்கில் பதிவிடப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
குறித்த பதிவின்படி, அந்த நடைப்பயணத்தை தலைமைத்தாங்கிய தேரர் உள்ளிட்ட குழுவினர் சோ அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்குச் சென்றது, இந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணத்தின்போதாகும். அந்தப் பதிவின்படி, தலைமை தேரரும் ஆலோகாவும், சோவை 2022–2023 காலப்பகுதியில் நடைபெற்ற “Following the Buddha’s Footsteps” புனித யாத்திரையின்போதுதான் சந்தித்துள்ளனர்.
அந்தப் புனித யாத்திரையின்போது ஆலோகாவும் சோவும் பிக்குகளுடன் இணைந்து பயணித்துள்ளதுடன், சோ இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையில் ஆயிரக்கணக்கான கிலோமீற்றர் தூரத்தை ஐந்து முறை பயணித்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பயணத்தில் பங்கேற்ற சுகோ (Sukho) மற்றும் கருணா (Karuṇā) என்ற மேலும் இரண்டு நாய்கள் தொடர்பாகவும் குறித்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 2023ஆம் ஆண்டு அந்தப் புனித யாத்திரை நிறைவடைந்த பின்னர், அதே ஆண்டில் Royal Wat Thai Buddhagaya விகாரையில் சோ உயிரிழந்ததாகவும் குறித்த பதிவில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், “ஆலோகா” உயிரிழந்துவிட்டதாகவும், “சோ” சமீபத்தில் உயிரிழந்ததாகவும் தெரிவித்து பரவி வரும் பதிவுகள் தவறானவை என்பதைத் தெளிவுபடுத்த முடிகிறது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் புனித பஞ்ஞாகார தேரர் தலைமையிலான பிக்குகளுடன் உலகம் முழுவதும் நடைபெறும் “Walk for Peace” சமாதானப் நடைப்பயணியில் பயணித்து வரும் ஆலோகா உயிரிழந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் பதிவுகள் தவறானவை என்பது தெரியவந்துள்ளது. சமூக ஊடகப் பதிவுகளில் காணப்படும் புகைப்படங்கள், ஆலோகாவுடன் “Following the Buddha’s Footsteps” புனித யாத்திரையில் இணைந்து பயணித்த, 2023ஆம் ஆண்டு உயிரிழந்த “சோ” (So) என்ற நாயின் புகைப்படங்கள் என்பதை எமது ஆய்வின் மூலம் உறுதிப்படுத்த முடிந்தது.
இதற்கிடையில், Shen Yu என்ற பிக்கு செப்டம்பர் 26ஆம் திகதி தனது Threads கணக்கில் சோ உயிரிழந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் கொண்ட பதிவொன்றை வெளியிட்டிருந்தார். எனினும், அந்தப் பதிவில் சோ உயிரிழந்த குறிப்பிட்ட திகதி குறிப்பிடப்படாததால், சோ சமீபத்தில் உயிரிழந்ததாக அதனைப் பொருள்படுத்த முடியாது.
மேலும், சில உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் சோ (So) சமீபத்தில் உயிரிழந்ததாக வெளியிட்டுள்ள செய்திகளும் தவறாக வழிநடத்தக்கூடியவையாக உள்ளன. கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், சோ 2023 ஆம் ஆண்டிலேயே உயிரிழந்துள்ளது என்பதுவும் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.



