Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    லோகேஷ் விஜய் மோதல் என்று சினிமா விகடன் செய்தி வெளியிட்டதா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2023-09-13
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO : லோகேஷ் விஜய் மோதல் என சினிமா விகடன் நியூஸ்காட் ஒன்று  சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம

    INTRO :

    லோகேஷ் விஜய் மோதல் என சினிமா விகடன் நியூஸ்காட் ஒன்று  சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link 

    சமூகவலைத்தளங்களில் “லோகேஷ் விஜய் மோதல்!?

    லோகேஷ் இயக்கத்தில் விஜய் திரிஷா இணைந்து நடிக்கும் படம் லியோ. சமீபத்தில் லியோ படப்பிடிப்பின் பொழுது நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷிடம் படத்தில் திரிஷாவுடன் ரொமான்ஸ் காட்சிகளும், படத்தில் ஒரு டூயட் சாங்கும் வேண்டும் என்று கூறியுள்ளார். கோபமடைந்த லோகேஷ் படத்தில் இருந்து விலகியதாகவும் படத்தின் 70 சதவீதம் குலுகுலு இயக்குனர் ரத்னா இயக்கி உள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. “ என கடந்த இம்மாதம் 11 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு  (11.01.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில்  லியோ திரைப்படம் உருவாகி வருகின்றது. வருகின்ற ஒக்டோம்பர் 19 ஆம் திகதி திரைக்கு வருவிருக்கின்ற லியோ படத்தின் 70 சதவீதம் இயக்குனர் ரத்னா இயக்கியுள்ளதாக ஒரு செய்தி இணையத்தில் பரவிவருகின்றமை காணக்கிடைத்தது.

    இது தொடர்பாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்ட போது, 

    நாம் முதலில் சினிமா விகடன் உத்தியோகப்பூர்வ  X (டுவிட்டர்) பக்கத்தினை ஆய்வு செய்தோம்.

    குறித்த தேடலின் போது, அவர்கள் குறித்த செய்தி போலியானது என அறிவித்து அவர்களின் பதிவிட்டிருந்த பதிவு எமக்கு கிடைக்கப்பெற்றது.

    X Link | Archived Link

    அவர்களின் பேஸ்புக் பக்கத்தில் குறித்த செய்தி போலியானது என்ற பதிவினை அவர்கள் பதிவிட்டிருந்தமையும் காணக்கிடைத்தது.

    நாம் மேற்கொண்ட ஆய்வறிக்கையின் படி, லோகேஷ் விஜய் மோதல் என சினிமா விகடன் செய்தி வெளியிட்டதாக பரவி வருகின்ற சினிமா விகடன் நியூஸ்காட் போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு


    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:லோகேஷ் விஜய் மோதல் என்று சினிமா விகடன் செய்தி வெளியிட்டதா?

    Written By: S.G.Prabu 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2023-09-13

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.