Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    “மீண்டும் எனக்கு இந்த நாட்டை தந்தால் நான் நன்றாக செய்வேன்“ என கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தாரா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2026-09-09
    3 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    Subscribe to our WhatsApp Channel INTRO தன்னிடம் மீண்டும் இந்த நாட்டை கொடுத்தால் தன்னால் நாட்டை சிறப்பாக செய்ய முடியும் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது. எனவே இந்த தகவல்

    Subscribe to our WhatsApp Channel

    INTRO

    தன்னிடம் மீண்டும் இந்த நாட்டை கொடுத்தால் தன்னால் நாட்டை சிறப்பாக செய்ய முடியும் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது.

    எனவே இந்த தகவல் தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

    தகவலின்விவரம் (What is the claim):

    Facebook | Archived Link

    மீண்டும் எனக்கு இந்த நாட்டை தந்தால் நான் நன்றாக செய்வேன் கோட்டபே ராஜபக்சே. என தெரிவித்து கடந்த 2026.09.07 ஆம் திகதி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது.

    மேலும் அதனை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    மேற்குறிப்பிட்ம சமூக ஊடகப் பதிவில் குறிப்பிடப்பட்டதனைப் போன்று கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஒரு கருத்தை தெரிவித்திருப்பாராயின் அது தொடர்பில் பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கும். எனினும் நாம் மேற்கொண்ட ஆய்வில் அவ்வாறான எந்த செய்திகளும் வெளியாகவில்லை என்பது உறுதியானது.

    மேலும் அண்மையில் கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சந்தர்ப்ங்கள் காணப்படுகின்றதா என நாம் ஆராய்ந்தபோது அவ்வாறான சந்தர்ப்பங்கள் எதுவும் இல்லை என்பதுவும் எமது ஆய்வின் மூலம் உறுதியானது.

    ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ எதிரிமான்ன

    மேலும் மேற்குறிப்பிட்ட சமூக ஊடகப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதனைப் போன்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த நாட்டை தனக்கு கொடுத்தால் தன்னால் நாட்டை சிறப்பாக செய்ய முடியும் என ஒரு கருத்தை எங்காவது தெரிவித்தாரா என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ எதிரிமான்னவை தொடர்பு கொண்டு நாம் வினவிய போது, இது தவறான தகவல் எனவும் கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் எந்தவொரு சந்தரப்பத்திலும் இதுபோன்ற ஒரு கருத்தை தெரிவிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

    மேலும் அண்மைக் காலமாக இதுபோன்ற தவறான தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதாகவும்,  அவை நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் நோக்கில் பகிரப்படும் தவறான தகவல் என்பதனையும் அவர் குறிப்பிட்டார்.

    எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  |TikTok | Youtube

    Conclusion: முடிவு

    எனவே எமது ஆய்வின் அடிப்படையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த நாட்டை தனக்கு கொடுத்தால் தன்னால் நாட்டை சிறப்பாக செய்ய முடியும் என தெரிவித்ததாக பகிரப்படும் தகவல் முற்றிலும் போலியானது என்பது கண்டறியப்பட்டது.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

    Result Stamp

    Title: “மீண்டும் எனக்கு இந்த நாட்டை தந்தால் நான் நன்றாக செய்வேன்“ என கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தாரா?

    Fact Check By: Suji Shabeedharan

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SS

    Suji Shabeedhran

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2026-09-09

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.