Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    நாட்டை நிர்வகிக்கும் திறமை அநுரவிற்கு இல்லை என கோட்டாபய தெரிவித்தாரா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2026-10-31
    3 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    சமீபகாலமாக அரசியல் ரீதியில் நாட்டில் இடம்பெறும் பல விடயங்களுடன் பல்வேறு கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தற்போது நாடு மோசமான நிலைக்குச் செல்கிறகு எனவும் நாட்டை நிர்வகிக்கும் திறமை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு இல்லை என

    சமீபகாலமாக அரசியல் ரீதியில் நாட்டில் இடம்பெறும் பல விடயங்களுடன் பல்வேறு கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தற்போது நாடு மோசமான நிலைக்குச் செல்கிறகு எனவும் நாட்டை நிர்வகிக்கும் திறமை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு இல்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்ததாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

    எனவே இந்த தகவல் தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

    தகவலின் விவரம் (What is the claim):

    “நாடு மோசமான நிலைக்குச் செல்கிறது, நாட்டை நிர்வகிக்கும் திறமை அநுராக்கு இல்லை” என கோட்டாபய ராஜபக்ஷ கூறியதாகப் பகிரப்படும் முகநூல் பதிவின் ஸ்கிரீன்ஷாட்

    Facebook | Archived Link

    குறித்த பதிவில் “நாடு மோசமான நிலைக்குச் செல்கிறது… நாட்டை நிர்வகிக்கும் திறமை அநுரவுக்கு இல்லை!” கோட்டாபய ராஜபக்‌ஷ என குறிப்பிட்டு கடந்த 2026.10.25 ஆம் திகதி பகிரப்பட்டிருந்தது.

    எனினும், இந்தக் கருத்து எப்போது, எங்கே, எந்த ஊடகத்திற்கு அல்லது எந்த நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது என்பது குறித்த எந்த விபரமோ, அதற்கான காணொளி, ஒலிப்பதிவு அல்லது செய்தி இணைப்போ அந்தப் பதிவில் குறிப்பிடப்படவில்லை.

    ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட கூற்று:

    எனவே மேற்குறிப்பிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டதனைப் போன்று நாடு மோசமான நிலைக்குச் செல்கிறது… நாட்டை நிர்வகிக்கும் திறமை அநுரவுக்கு இல்லை என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தாரா என்பதனையே ஃபேக்ட் கிரஸண்டோ இங்கு ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையில், நாட்டின் தற்போதைய நிர்வாக நிலை மற்றும் ஜனாதிபதி அநுரகுமாரவின் அரசியல் நிர்வாகம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கருத்து தெரிவித்திருப்பாராயின் அது தொடர்பில் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கும் எனினும் நாம் மேற்கொண்ட ஆய்வில் அவ்வாறான எந்த செய்தி அறிக்கையிடல்களும் ஊடகங்களில் வெளியாகியிருக்கவில்லை.

    மேலும் நாம் முன்னாள் ஜனாதிபதி அண்மையில் ஊடகங்களுக்கு ஏதேனும் கருத்துக்களை தெரவித்துள்ளாரா என்பதனையும் ஆய்வு செய்தோம் இதன்போது கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஊடகங்களிடம் பேசியமை தொடர்பில் எந்த தகவல்களும் வெளியாகியிருக்கவில்லை.

    கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பான அண்மைய செய்திகள்

    இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பில் அண்மையில் வெளியான முக்கிய செய்திகள் மற்றும் அவற்றுக்கான ஆதாரங்கள் கீழே சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன.

    வெளிநாட்டுப் பயணத் தடை தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு

    முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடை தொடர்பான வழக்கில், நவம்பர் 4ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Link

    உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு

    2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்குமாறு கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்திருந்தது.

    அந்தத் தீர்ப்பை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.Link

    லலித்–குகன் காணாமலாக்கப்பட்ட வழக்கில் சாட்சியம்

    லலித் மற்றும் குகன் காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் கோட்டாபய ராஜபக்ஷ கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

    யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு இணையவழியில் சாட்சியமளிப்பதற்காக அவர் முன்னிலையாகியிருந்தார். Link

    மிக் விமானக் கொள்வனவு தொடர்பில் விசாரணை

    இலங்கை விமானப்படைக்கு மிக் போர் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டமை தொடர்பான விசாரணைக்காக கோட்டாபய ராஜபக்ஷ நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு (FCID) அழைக்கப்பட்டார்.

    அங்கு பல மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அவர் வெளியேறியதாகச் செய்திகள் வெளியாகின.Link

    மேற்குறிப்பிட்ட செய்தி அறிக்கையிடல்களின் போதும் கூட அவர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தமைக்கான எந்த ஆதாரங்களும் இல்லை.

    ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

    எனவே உண்மையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவ்வாறான ஒரு கருத்தை தெரிவித்துள்ளாரா என்பது தொடர்பில் நாம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்னவை தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு வினவினோம். இதன்போது சமூக ஊடகங்களில் பகிரப்படும் இந்த தகவல் முற்றிலும் போலியானது எனவும் முன்னாள் ஜனாதிபதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது எந்த ஊடகங்களுக்கோ, பொதுவெளியிலோ கருத்து தெரவிப்பதனை தவர்த்து வருகின்றார் எனவும் அவர் குறிப்பிட்டார.

    அத்தோடு அமைதியாக தன் வேலைகளை யாருக்கும் தொந்தரவு இன்றி செய்துவரும் ஒரு மனிதன் மீது இவ்வாறு தவறான தகவல்களை பரப்புவது அவரின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் செயற்பாடு எனவும் சஞ்ஜீவ எதிரிமான்ன மேலும் சுட்டிக்காட்டினார்.

    எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube

    Conclusion: முடிவு

    எமது ஆய்வின் அடிப்படையில், “நாடு மோசமான நிலைக்குச் செல்கிறது; நாட்டை நிர்வகிக்கும் திறமை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு இல்லை” என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்ததாகப் பகிரப்படும் தகவல் தவறானது என்பது கண்டறியப்பட்டுள்ளது. இக்கூற்றுக்கு ஆதாரமான எந்த ஊடக அறிக்கையிடலும் இல்லை என்பதுடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இதனை முற்றாக மறுத்துள்ளது.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SS

    Suji Shabeedhran

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2026-10-31

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.