Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    சாம்பியன் கிண்ண அரையிறுதியில் தோல்வியடைந்தமையால் டிராவிஸ் ஹெட் அழுதாரா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2025-03-15
    4 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO:  சாம்பியன் கிண்ண அரையிறுதியில் தோல்வியடைந்தமையால் டிராவிஸ் ஹெட் அழுதார் என சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானத


    INTRO:  
    சாம்பியன் கிண்ண அரையிறுதியில் தோல்வியடைந்தமையால் டிராவிஸ் ஹெட் அழுதார் என சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.



    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link  | Archived Link 

    சமூக வலைத்தளங்களில் “ அகமதாபாத் வேர்ல்டு

    கப்பின் போது

    140 கோடி இந்தியர்களை

    அழ வைத்த டிராவிஸ் ஹெட்

    துபாயில் நேற்று ஆஸ்திரேலியா தோற்ற பின்

    மனைவியின் தோளில் சாய்ந்து கண்ணீர் விட்டார். 

    அழுகை எதற்காக ஆனாலும்

    வலி மிக்கது ஹெட்….

    பெட்டர் நெக்ஸ்ட் டைம் ”இம் மாதம் 25 ஆம் திகதி 2025 ஆம் ஆண்டு (05.03.2025) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

    இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்) 

    நாம் முதலில் குறித்த பதிவில் இருந்த காணொளியை ஆய்வு செய்தபோது, அதில் இருந்த இரு புகைப்படங்களிலும் இருந்த பெண் வேறுப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    அவர்கள் அணிந்திருந்த உடைகளும் வேறுப்பட்டு காணப்பட்டது.

    குறித்த இரு புகைப்படங்களிலும் டிராவிஸ் ஹெட் அணிந்திருந்த ஜெர்சி சாம்பியன் கிண்ணத்திற்காக இம்முறை அவுஸ்ரேலியா அணி அணிந்த ஜெர்சி அல்ல என்பது காணக்கிடைத்தது.

    link


    டிராவிஸ் ஹெட் மனைவி தொடர்பாக நாம் ஆய்வினை மேற்கொண்டபோது, அவர் Jessica Davies என தெரியவந்தது. மேலும் நாம் இணையத்தில் வைரலாகும் குறித்த புகைப்படத்தில் இருக்கும் இரு பெண்களும் டிராவிஸ் ஹெடின் மனைவி அல்ல என தெரியவந்தது.

    instagram.com

    குறித்த புகைப்படங்கள் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கி இருக்கலாம் என சந்தேகம் எழவே நாம் அதனை ஆய்வுசெய்த போது, இணையத்தில் வைரலாகும் குறித்த இரு புகைப்படங்களும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.

    இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், சாம்பியன் கிண்ண அரையிறுதியில் தோல்வியடைந்தமையால் டிராவிஸ் ஹெட் அழுதார் என பரவுகின்ற புகைப்படமானது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புகைப்படம் என கண்டறியப்பட்டுள்ளது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு


    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:சாம்பியன் கிண்ண அரையிறுதியில் தோல்வியடைந்தமையால் டிராவிஸ் ஹெட் அழுதாரா?

    Fact Check By: S.G.Prabu 

    Result: Altered

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2025-03-15

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.