
INTRO:
யாழ் தேவி புகையிரதத்தின் பெட்டி வேறாக கழண்டு சம்பவம் என சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):
சமூக வலைத்தளங்களில் “ யாழ் தேவி புகையிரதத்தின் பிரயாணத்தின் இடையே பெட்டி ஒன்று வேறாக கழன்டு சென்ற தருணம்.”இம் மாதம் 04 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு (04.12.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
முதலில் நாம் இவ்வாறு சம்பவம் சமீபத்தில் இடம்பெற்றமைக்கான செய்தி எதுவும் பிரதான ஊடகங்களில் வெளியாகியிருந்ததா என ஆய்வினை மேற்கொண்டபோது, அவ்வாறான எவ்விதமான பதிவும் எமக்கு கிடைக்கவில்லை.
The Morning பத்திரிகையின் பேஸ்புக் பக்கத்தில் இது 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற செம்பவம் என குறித்த வீடியோ பதிவேற்றம் செய்திருந்தமை காணக்கிடைத்தது.
எனவே நாம் இணையத்தில் வைரலாகியுள்ள குறித்த காணொளியில் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வுசெய்த போது, 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் திகதி (03.12.2018) பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ எமக்கு கிடைக்கப்பெற்றது.
குறித்த பதிவில் இன்று யாழ்.தேவி புகையிரத்தில் ஒரு பெட்டி கழண்ற விதம் என சிங்களத்தில் பதிவிட்டு பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.
இது தொடர்பாக வெளியான செய்திகளும் எமக்கு கிடைக்கப்பெற்றன.
News Link 1 | News Link 2 | News Link 3
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், யாழ்.தேவி புகையிரதத்தின் பெட்டி வேறாக கழண்டு சம்பவம் என பகிரப்படும் வீடியோ 2018 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோ என கண்டறியப்பட்டது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
Title:யாழ் தேவி புகையிரதத்தின் பெட்டி வேறாக கழண்டு சம்பவம் சமீபத்தில் இடம்பெற்றதா..?
Fact Check By: S.G.PrabuResult: Misleading



