Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயில் தப்பிய வீடு என பகிரப்படும் புகைப்படம் பற்றிய உண்மை தெரியுமா ?

    කරුණු විමර්ශනය කිරීම
    2025-01-14
    3 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO:  லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயில் இருந்து தப்பிய வீடு என சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸ


    INTRO:  
    லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயில் இருந்து தப்பிய வீடு என சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link  | Archived Link 

    சமூக வலைத்தளங்களில் “ 🛑குர்ஆனைக் கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்த இடம் (வீடு /மஸ்ஜித்)

    இடம் : லாஸ் ஏஞ்சல்ஸ் ”இம் மாதம் 13 ஆம் திகதி 2025 ஆம் ஆண்டு (13.01.2025) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

    இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    நாம் குறித்த புகைப்படத்தினை கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வுசெய்த போது, இது கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஹாவாய் நாட்டில் பரவிய காட்டுத்தீயில் தப்பிய வீடு என கண்டறியப்பட்டது.

    இது தொடர்பாக வெளியாக செய்தியறிக்கைகள் எமக்கு கிடைக்கப்பெற்றன.

    News Link 

    மேலும் நாம் கலிபோர்னியா காட்டுத்தீயில் எதும் வீடு தப்பியதா என ஆய்வு செய்தபோது அவ்வாறான சம்பவம் இடம்பெற்றிருந்தமையும் காணக்கிடைத்தது.

    News Link

    இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயில் தப்பிய வீடு என பகிரப்படும் புகைப்படம் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஹாவாய் நாட்டில் பரவிய காட்டுத்தீயில் தப்பிய வீடு என கண்டறியப்பட்டது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு

    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயில் தப்பிய வீடு என பகிரப்படும் புகைப்படம் பற்றிய உண்மை தெரியுமா ?

    Fact Check By: S.G.Prabu 

    Result: Misleading

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2025-01-14

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.