Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    யானையின் நடனம் என்று பரவும் வீடியோ உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2024-03-11
    2 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :தமன்னாவை மிஞ்சிய யானை நடுவீதியில் குத்தாட்டம் என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நி

    INTRO :
    தமன்னாவை மிஞ்சிய யானை நடுவீதியில் குத்தாட்டம் என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):


    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ” வா நு காவாலையா நு காவாலா…

    தமன்னாவை மிஞ்சிய யானை

    நடுவீதியில் குத்தாட்டம் “ என கடந்த மாதம் 28 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு  (28.02.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    நாம் முதலில் குறித்த வீடியோவை நன்கு அவதானித்தபோது, இது உண்மையான யானை இல்லை என அதன் அசைவுகளை வைத்து காணக்கூடியாத இருந்தது.

    மேலும் வீடியோவை அவதானித்தபோது, அதில் காணப்பட்ட வீதிகளின் பெயர் பலகையின் மூலம் இது இந்தியாவில் கேரளா மாநிலத்தில் எடுக்கப்பட்டமை கண்டறியப்பட்டது.

    நாம் தொடர்ந்து மேற்கொண்ட தேடலில் _anil.arts_ என்ற இன்ஸ்டெகிராம் பக்கத்தில் இணையத்தில் தற்போது வைரலாகின்ற குறித்த வீடியோ காணக்கிடைத்தது.

    எமது குழுவினர் அவர்களை தொடர்புகொண்டு வினவிய போது, அவர்கள் நிகழ்வுகள் மேற்கொள்ளும் அணி என்றும், குறித்த யானை உடை அவர்களால் தயார் செய்யப்பட்டதோடு, அதில் உள்ளே நடனக்கலைஞர்கள் இருந்து நடனம் ஆடுகின்றனர் எனவும் எமக்கு உறுதி செய்தனர்.

    இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், யானையின் நடனம் என பரவும் வீடியோ என பரவும் வீடியோ இரு நடன கலைஞர்களால் உருவாக்கப்பட்டது என்று கண்டறியப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக எமது ஆங்கில பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு

    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:யானையின் நடனம் என்று பரவும் வீடியோ உண்மையா?

    Fact Check By: S.G.Prabu 

    Result: Misleading

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2024-03-11

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.