Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    210 வயதில் வாழும் பெண்மணி உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2021-10-11
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :பாகிஸ்தான் நாட்டில் வாழும் 210 வயது என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்

    INTRO :
    பாகிஸ்தான் நாட்டில் வாழும் 210 வயது என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    Star’s boy’s batti  என்ற பேஸ்புக் பக்கத்தில் ”  பாகிஸ்தானில் உள்ள அதிக வயதான  தாய்,சில நாட்களூக்கு  முன்

    தனது  210 வயது பிறந்தநாளை கொண்டாடினார்.🌹இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பூட்டி “ என இம் மாதம் 03 ஆம் திகதி 03.10.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது போன்று மேலும் பலர் பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

    நாம் இது குறித்து கின்னஸ் சாதனை புத்தக இணையத்தளத்தில் தேடியபோது, உலகிலேயே அதிக வயதான பெண் ஜப்பானில் வசிக்கிறார் என்றும், அவருக்கு வயது 117 என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

    இது தொடர்பாக முழுமையான கட்டுரையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள். GuinnessWorldRecords Link

    பாகிஸ்தானில், 210 வயது பெண் வசிக்கிறார் என்பது தொடர்பான உத்தியோகப்பூர்வ தகவல் எதுவும் கிடைக்கப் பெறவில்லை. கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் அங்கீகரிக்கப்பட்ட உலகின் வயதான பெண்மணி ஜப்பானில் வசிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்கமைய பேஸ்புக்கில் பகிரப்பட்ட தகவலில் நம்பகத்தன்மை இல்லை என்பது உறுதி செய்யப்படுகிறது.

    நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், 210 வயதில் வாழும் பெண்மணி என பகிரப்படும் புகைப்படம் முற்றிலும் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.

    எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

    எமது சிங்கள பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:210 வயதில் வாழும் பெண்மணி உண்மையா?

    Fact Check By: S G Prabu 

    Result: Misleading

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2021-10-11

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.