
INTRO :
நேபாளத்தில் வெள்ளத்திற்கு சிக்கி மீட்கப்பட்ட சிறுமி என சமூக வலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில் “#Watch | நேபாளம்: பெருவெள்ளத்தில் சிக்கி சுமார் 60 மணி நேரங்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட 6 வயது சிறுமி!
அவரின் உடல்நிலை மோசமடைந்த நிலையில், உடனடியாக மருத்துவ உதவி அளிக்கப்பட்டுள்ளது
#SunNews | #NepalFloods” என இம் மாதம் 01 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு (01.09.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நேபாள வெள்ளப் பெருக்கின் சிக்கி மீட்கப்பட்ட சிறுமி என பகிரப்படும் காணொளியில், ஒரு சிறுமி சேற்றில் சிக்கியுள்ளார். சிறுமியின் முகத்திலுள்ள சேற்றை அகற்றியபோது அவர் கண்களைத் திறந்த விதத்தில் ஒருவித இயல்புக்கு மாறான தன்மையைக் காண முடிந்தது.
60 மணி நேரத்திற்கும் மேலாக சேற்றில் சிக்கியிருந்த ஒரு சிறுமி, உடனடியாக அவ்வாறு இயல்பான முகத்துடன் இயல்பாகப் பதிலளிப்பது அசாதாரணமான ஒன்றாகும்.

மேலும், சம்பந்தப்பட்ட வைரல் காணொளியில் மேலும் சில இயல்புக்கு மாறான தன்மைகளைக் காண முடிந்தது. வீடியோவில் உள்ள ஒருவர் சிறுமி இருக்கும் இடத்திற்கு மேலே தகடு போன்ற ஒரு பொருளின் மீது நின்று கொண்டிருப்பதையும், சிறுமி அதற்கு கீழே இருப்பதையும் அவதானிக்க முடிகிறது.

எவ்வாறாயினும், இதுபோன்றதொரு சம்பவம் உண்மையில் நேபாளத்தில் பதிவாகியுள்ளதா என்பதைச் கண்டறிய நாம் Keywords மூலம் ஆய்வு மேற்கொண்டோம். அதில், 2026 ஆகஸ்ட் 29 அன்று நேபாளத்தின் ஆயுதம் ஏந்திய பொலிஸ் படையினரால் (Armed Police Force) தமது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட இச்சம்பவத்தின் உண்மையான மற்றும் அசல் வீடியோ கண்டறியப்பட்டது.
சம்பந்தப்பட்ட அசல் வீடியோவை வெளியிட்டு, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மனிஷா மகர் என்ற சிறுமியைத் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் போது பாதுகாப்பாக மீட்டு, நேபாள இராணுவத்தின் ஒருங்கிணைப்புடன் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக நேபாள பாதுகாப்புப் படைத் தலைவர் திமுரே ரசுவா மற்றும் குழுவினர் தெரிவித்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட உண்மையான வீடியோ, இந்த வைரல் வீடியோவை விட வேறுபட்டது. உண்மையான வீடியோவில் அச்சிறுமி வலியால் முனகும் சத்தம் கேட்கிறது; அதன் வழிகாட்டலில் பொலிஸ் அதிகாரிகள் சிறுமியை மீட்க நடவடிக்கை எடுக்கின்றனர்.
உண்மையான வீடியோவை ஆராயும்போது, அந்த மீட்பு நடவடிக்கை வைரல் வீடியோவில் காட்டப்பட்டுள்ளதை விட மிகவும் சிக்கலானதாகவும் கடினமானதாகவும் இருப்பது தெரியவருகிறது. மேலும், உண்மையான வீடியோவின் படி, சிறுமி மீட்கப்பட்ட பிறகு அவர் கண்களைத் திறப்பதோ அல்லது அவரது முகம் தெளிவாகக் காட்டப்படுவதோ இல்லை.
இது குறித்து சர்வதேச ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி இருந்தமை காணக்கிடைத்தது.

ஆகவே இணையத்தில் பகிரப்படும் குறித்த காணொளி செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டு இருக்கலாம் என நாம் அதனை செயற்கை நுண்ணறிவினை கண்டறியும் கருவியின் மூலம் ஆய்வு செய்த போது அது செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட காணொளி என கண்டறியப்பட்டது.


நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், நேபாளத்தில் வெள்ளத்திற்கு சிக்கி மீட்கப்பட்ட சிறுமி என பரவும் காணொளி செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டது என கண்டறியப்பட்டது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.



