Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    Fact Check : சவுதி அரேபியாவில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய மனித எலும்புக்கூடா இது?

    කරුණු විමර්ශනය කිරීම
    2021-12-21
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :சவுதி அரேபியாவில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய எலும்புக்கூடு என சமூக வலைத்தளங்கள் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த

    INTRO :
    சவுதி அரேபியாவில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய எலும்புக்கூடு என சமூக வலைத்தளங்கள் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் சவூதி அரேபியாவில் கண்டெடுக்கப்பட்ட

    மிகப்பெரிய எலும்புக்கூடுகள்..

    திருக்குரானில் அறிவித்த அல்லாவால் 

    தண்டிக்கப்பட்ட ஹீத் நபியின் ஆத்

    சமூகத்தினரின் உடல்கள்என 

    அறியப்படுகின்றது… மிகப்பெரிய 

    மரங்களையும் பிடிங்கி எடுக்கும் ஆற்றலும் 

    பெரிய உடலும் கொண்டவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகள் ஏற்கமால் ஆணவம் கொண்டதால் அழிக்கப்பட்டனர் என குரானில் அறிவிக்கப்பட்டது.

    திருக்குரானில் அதிசியத்தன்மைக்கு மேலும் 

    ஓர் சான்று.. மாஷா அல்லாஹ்..

    அல்லாஹு அக்பர்.. #IJAS “ என கடந்த வரும் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி (30.08.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்) 

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

    முதலில் நாம் குறித்த புகைப்படத்தினை  கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்தபோது, designcrowd.com என்ற இணையத்தளத்தில் குறித்த புகைப்படங்கள் பதிவாகியிருந்தமை எம்மால் காணக்கிடைத்தது. 

    குறித்த புகைப்படமானது, Whitmath57 என்ற நபரால் ‘Size Matters 4’ என்ற போட்டிக்கு சமர்ப்பிக்கப்பட்ட புகைப்படம் என கண்டறியப்பட்டது.

    Whitmath57 என்ற நபர் அமெரிக்காவை சேர்ந்த நபர். இவர் குறித்த புகைப்படத்தினை 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி உருவாக்கியுள்ளதாக பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    designcrowd.com | Archived Link 

    அதே இணையத்தளத்தில் பேஸ்புக்கில் பகிரப்படும் மற்றைய புகைப்படங்களும் காணப்பட்டது. 

    designcrowd.com | Archived Link

    மேலும் இதே புகைப்படங்கள் இந்து மதத்தினை ஒத்தவாறு கடோத்கஜன் எலும்பு கண்டுபிடித்துள்ளதாகவும், கிறிஸ்தவ மதத்திற்கு ஏற்றதை போன்று திருவிவிலியத்தில் வரும் கோலியாத் என்பவனின் எலும்புக் கூடு ஜெருசலேம் அருகே கிடைத்தது என இதற்கு முன்னர் பலராலும் பகிரப்பட்டிருந்தமையும் காணக்கிடைத்தது.

    எனவே நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், சவுதி அரேபியாவில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய மனித எலும்புக்கூடு என பகிரப்படும் புகைப்படம் போலியானது என்று கண்டறியப்பட்டுள்ளது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel

    கடோத்கஜன் எலும்பு கண்டெடுக்கப்பட்டதாக பரவும் வதந்தி!

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:Fact Check : சவுதி அரேபியாவில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய மனித எலும்புக்கூடா இது?

    Fact Check By: S G Prabu 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2021-12-21

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.