
INTRO :
18 வயதுக்கு குறைந்த சிறுவர்கள் காதல் பாடல்கள் மற்றும் கல்வி சம்பந்தப்படாத நிகழ்ந்நிகள் செய்தால் வழங்கப்பட்டவுள்ள தண்டைனை என சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் ” இணையதளம் மூலமாக சிறுவர்கள் சீர்கேட்டு செல்வதனால் 18 வயதுக்கு குறைந்த சிறுவர்கள் காதல் பாடல்கள் மற்றும் கல்வி சம்பந்தப்படாத நிகழ்ச்சிகள் செய்ய வைக்கும் பெற்றோர்களுக்கு மூன்று மாத சிறை தண்டனையும் ரூபாய் ஒரு லட்சம் அபராதமும் வழங்கப்படுவதுடன் அவ் வீடியோ செய்த சிறுவர்களுக்கு இரண்டு வருட சீர்திருத்தப் பள்ளியும் வழங்கப்படும்., “ என இம் மாதம் 25 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு (25.02.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் முதலில் குறித்த சட்டம் அமுலாக்கம் தொடர்பாக பிரதான ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளதா என ஆய்வினை மேற்கொண்ட போது, அவ்வாறு எவ்வித செய்திகளும் வெளியானதாக எமக்கு தகவல்கள் கிடைக்கவில்லை.
இது தொடர்பாக எமது குழு, பொலிஸ் ஊடக பேச்சாளரை தொடர்புகொண்டு வினவியபோது, இணையத்தில் தற்போது பரவி வருகின்றமை போன்று தண்டனைகள் எதுவும் புதிதாக நிகழ்நிலை காப்பு சட்டத்தில் அறிவிக்கப்படவில்லை என தெரிவித்தார்.
மேலும், தண்டனைக்கு உரிய குற்றங்கள் வீடியோக்களில் அடங்கியிருந்தால் அவர்களுக்கு குறித்த குற்றங்களுக்கு ஏற்ப நடைமுறையில் உள்ள தண்டனைகள் வழங்கப்படும் என சுட்டிக்காட்டினார்.
அத்துடன் இதுவரையில், புதிதாக அறிவிக்கப்பட்ட நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அமைக்கப்படும் ஆணையம் அமைக்கப்படாத நிலையில் யாரையும் குறித்த சட்டத்தின் கீழ் கைதுசெய்ய முடியாது எனவும் உறுதி செய்தார்.
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின் அடிப்படையில், தண்டனைக்குரிய வகையில் குறித்த வீடியோ நிரூபிக்கப்பட்டால் குறித்த நடவடிக்கையில் ஈடுபட்ட நபர்கள் குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தின் கீழ் கைது செய்யப்பட முடியும் என தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டு வெளியிடப்பட்ட 2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தினை நாம் ஆய்வு செய்தபோது, இணையத்தில் பரவி வருகின்றதை போன்று புதிய சட்டங்கள் எதுவும் இதுவரையில் அதில் உள்ளடக்கம் செய்யப்படவில்லை என்று கண்டறியப்பட்டது.
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், 18 வயதுக்கு குறைந்த சிறுவர்களுக்கு புதிய சட்டம் என பரவும் தகவலில் எவ்விதமான உண்மைத் தன்மையும் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
Title:18 வயதுக்கு குறைந்த சிறுவர்களுக்கு புதிய சட்டம் என பரவும் தகவல் உண்மையா?
Written By: S G PrabuResult: False



