Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    புதுச்சேரி மீனவர்கள் வலையில் பிடிபட்ட மனித மீன் இதுவா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2021-08-19
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :புதுச்சேரி மீனவர்கள் வலையில் பிடிப்பட்ட மனித மீன் என்று ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல்

    INTRO :
    புதுச்சேரி மீனவர்கள் வலையில் பிடிப்பட்ட மனித மீன் என்று ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    KS marketing Jaffna என்ற பேஸ்புக் கணக்கில் ” இன்று  புதுச்சேரி  மீனவர்கள் வலையில் பிடிபட்ட அதிசய உருவம் கொண்ட மணித மீன்

     உடனே மீனவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர் காவல்துறையினர் அதனை கைப்பற்றி மீன்வளத்துறைக்கு  பரிசோதனைக்காக  அனுப்பிவைத்தனர் “ என இம் மாதம் 07 ஆம் திகதி (07.08.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது போன்று மேலும் பலர் பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்) 

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

    நாம் அந்த மனித மீன் புகைப்படத்தினை கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, இது 2017 ஆம் ஆண்டு முதல் இணையத்தில் பல்வேறு நாடுகளில் கண்டு எடுக்கப்பட்ட மனித மீன் என்ற போலியான தகவல் பரவி வந்துள்ளமை காணக்கிடைத்தது.

    நாம் குறித்த புகைப்படம் தொடர்பில் ஆய்வினை தொடர்ந்து மேற்கொண்டபோது, அந்த புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த இணையத்தளங்கள் தற்போது பயன்பாட்டில் இல்லை என்பது தெரியவந்தது. 

    A picture containing text, person, different

Description automatically generated

    எனினும் இந்த புகைப்படத்தில் உள்ள உருவ சிலை மரத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ளமை எமது ஆய்வில் தெரியவந்தது. இது மரம் மற்றும் சிலிக்கனை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட சிலையாகும். 

    இது தொடர்பாக பல்வேறு சர்வதேச உண்மை கண்டறியும் நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வறிக்கைகள்

    hoaxorfact.com|  snopes.com |  hoax-net.be

    இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வுக்கு அமைய புதுச்சேரி மீனவர்கள் வலையில் பிடிபட்ட மனித மீன் என பகிரப்படும் தகவல் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். 

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:புதுச்சேரி மீனவர்கள் வலையில் பிடிபட்ட மனித மீன் இதுவா?

    Fact Check By: Nelson Mani 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    NM

    Nelson Mani

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2021-08-19

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.