Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    எம்.ஜி.ஆர் போல இருக்கும் இலங்கையர் என பரவும் வீடியோ உண்மையா ?

    කරුණු විමර්ශනය කිරීම
    2024-01-10
    2 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :எம்.ஜி.ஆர் போல் இருக்கும் இலங்கையர் என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்

    INTRO :
    எம்.ஜி.ஆர் போல் இருக்கும் இலங்கையர் என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ” *அச்சு அசல் எம்.ஜி.ஆரைப் போல் இருக்கும் இவரின் பெயர் ரெய்சார்னாடெட் இலங்கையை சேர்ந்தவர்* “ என கடந்த வருடம் டிசம்பர் மாதம் 2023 ஆம் திகதி (23.12.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    நாம் முதலில் குறித்த வீடியோவில் இருந்து சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, RaStudioFX என்ற இன்ஸ்டெகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த வீடியோ ஒன்று எமக்கு கிடைத்தது. குறித்த இன்ஸ்டெகிராம் பக்கத்தில் கத்தில் AI தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பல நடிகர்களின் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதில் இருந்த தமிழ் நாட்டின் மறைந்த முன்னாள் முதல்வர் மற்றும் நடிகருமான எம்.ஜி.ஆர் வீடியோவில் Shiyas kottakodan நன்றி என தெரிவித்து பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

    நாம் குறித்த பெயரினை கூகுளில் பயன்படுத்தி ஆய்வு செய்த போது, இவர் இந்தியாவில் கேரளா மாவட்டத்தில் நிலம்பூர் பிரதேசத்தினை சேர்ந்த நபர் என கண்டறியப்பட்டது.

    Facebook Link | Youtube Link 

    irrelevant to the story…

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு
    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:எம்.ஜி.ஆர் போல இருக்கும் இலங்கையர் என பரவும் வீடியோ உண்மையா ?

    Written By: S G Prabu 

    Result: False

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2024-01-10

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.