Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    பணம் கொடுத்து ஆஸ்கர் யூடியுப் பக்கத்தில் ஜெய்பீம் படம் பதிவேற்றம் செய்யப்பட்டதா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2022-01-27
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :5000 டொலர் கொடுத்து ஆஸ்கர் யூடியுப் பக்கத்தில் ஜெய்பீம் படத்தினை சூர்யா வெளியிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்கள் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண

    INTRO :
    5000 டொலர் கொடுத்து ஆஸ்கர் யூடியுப் பக்கத்தில் ஜெய்பீம் படத்தினை சூர்யா வெளியிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்கள் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ” ஆஸ்கார் யூடியூப் சேனலில் காசு கட்டி பொய் பீம் காட்சி இடம்பெற வைத்த  சூர்யா…இது தெரியாத சூரியா விசிறிகள். “ என  தந்தி டிவியின் நிவூஸ் அட்டை ஒன்றில் 5000 டாலரில் ஆஸ்கர் சேனலில் ஒளிபரப்பு ஆஸ்கர் யூடியூப் பக்கத்தில் “ஜெய்பீம்” படம் தானாக பதிவேற்றப்படவில்லை 3 லட்சத்து 70 ரூபாய் ( 5000 டாலர்) பணம் கொடுத்து வெளியிட்டுள்ளார்கள்! சூர்யா ஆஸ்கர் விருது வாங்கியதாக கொண்டாடி வரும் அப்பாவி ரசிகர்கள் என இம்மாதம் 23 ஆம் திகதி (23.01.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

    நடிகர் சூர்யா தயாரித்து மற்றும் நடித்துள்ள ஜெய் பீம் திரைப்படம், ஆஸ்கர் விருதுகள் 2022 இற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதை, தொடர்ந்து குறித்த திரைப்படம் பற்றிய அறிமுக வீடியோவை ஆஸ்காரின் உத்தியோகப்பூர்வ யூடியுப் பக்கத்தில் வெளியிட்டிருந்தனர்.

    India Today Link I Indian Express Link

    குறித்த பதிவேற்றத்தினை சூர்யா லஞ்சம் கொடுத்து வெளியிட்டுள்ளதாகச் சிலர் தகவல் பகிர்ந்து வருகின்றனர். முழு படமாக இல்லாமல், குறித்த ஜெய் பீம் திரைப்படத்தை பற்றிய அறிமுகத்திற்காக, 12 நிமிட காட்சிகளுடன் இந்த வீடியோ ஆஸ்கர் தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளமை காணக்கிடைத்தது.


    இந்நிலையில் தந்தி டிவியின் நியூஸ் கார்டில் சூர்யா பணம் கொடுத்து ஆஸ்கார் விருது வென்றதாக பகிரப்பட்ட புகைப்படம் உண்மையா என அறிய, எமது இந்திய தமிழ் பிரிவினர் தந்திடிவி ஆசிரியர் குழுவை தொடர்புக்கொண்டு வினவியுள்ளது, இது போலியானது என்று கூறிய அவர்கள், இதுபற்றி ஏற்கனவே தந்தி டிவி தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளதாகவும், தெரிவித்தனர். 

    இது குறித்து தந்தி டிவியின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த பதிவினை எம்மால் காணக்கிடைத்தது.

    Archived Link

    ஆஸ்கர் யூடியுப் தளத்தில் ஜெய் பீம் படம்; தந்தி டிவி பெயரில் பரவும் போலியான செய்தி!

    எனவே நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், பணம் கொடுத்து ஆஸ்கர் யூடியுப் பக்கத்தில் ஜெய்பீம் படம் பதிவேற்றம் என தந்தி டிவி பெயரில் பகிரப்படும் தகவல் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். 

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:பணம் கொடுத்து ஆஸ்கர் யூடியுப் பக்கத்தில் ஜெய்பீம் படம் பதிவேற்றம் செய்யப்பட்டதா?

    Fact Check By: S G Prabu 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2022-01-27

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.