Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    உலகின் ஐந்தாவது பெரிய வைரம் தமன்னாவிடமா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2023-07-28
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO : உலகின் ஐந்தாவது பெரிய வைரவம் தமன்னாவிடம் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் க

    INTRO :

    உலகின் ஐந்தாவது பெரிய வைரவம் தமன்னாவிடம் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link | website link

    சமூகவலைத்தளங்களில் “உலகின் 5-வது பெரிய வைரம்; தமன்னாவுக்கு பரிசளித்த நபர்! “ என இம் மாதம் 25 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு  (25.07.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    இது தொடர்பாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்ட போது, 

    முதலில் குறித்த புகைப்படத்தினை கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, குறித்த புகைப்படம் 2019 ஆம் ஆண்டு முதல் இணையத்தில் வைரலாகி வருகின்றமை காணக்கிடைத்தது.

    உபசனா 2019 ஆம் ஆண்டு இந்த படத்தை முதலில் ட்விட்டரில் வெளியிட்டார்.

    இதன் உண்மை தன்மையினை தெரியாமல், இதே படத்தை மீண்டும் புதியது போல சிலர் தற்போது பகிர்ந்து சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.

    https://www.instagram.com/p/CvFafi_pwME/

    ஆனால், 2019 ஆம் ஆண்டே இதற்கு நடிகை தமன்னா வைர மோதிரமும் அல்ல; அது ஒரு பாட்டில் ஓபனர் என பதில் அளித்து விட்டார். அது புரியாமல் மீண்டும் மீண்டும் இந்த புகைப்படத்தை சிலர் பகிர்ந்து, இது வைரம் என வதந்தி பரப்புகிறார்கள் என்று தெளிவாகிறது.

    இது தொடர்பாக நடிகை தமன்னா மீண்டும் தனது இன்ஸ்டெகிராம் பக்கத்தில் இது தொடர்பான தெளிவூட்டல் வழங்கிய தொடர்பாக வெளியாக செய்தி அறிக்கைகளும் எமக்கு கிடைக்கப்பெற்றது.

    indianexpress.com

    நாம் மேற்கொண்ட ஆய்வறிக்கையின் படி, உலகின் ஐந்தாவது பெரிய வைரம் தமன்னாவிடம் என பரவும் செய்தியினை தமன்னா மறுத்துள்ளதோடு, அது போத்தல் திறப்பான் என தெரிவித்திருந்தமை கண்டறியப்பட்டது.

    இது தொடர்பாக எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு


    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:உலகின் ஐந்தாவது பெரிய வைரம் தமன்னாவிடமா?

    Written By: S.G.Prabu 

    Result: Missing Context

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2023-07-28

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.