Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    பத்தரமுல்லையில் நடைபெற்ற SJBயின் போராட்டத்தின் ட்ரோன் காட்சி என சமூக ஊடகங்களில் பரவும் AI புகைப்படம்

    කරුණු විමර්ශනය කිරීම
    2026-09-28
    7 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    Subscribe to our WhatsApp Channel INTRO : அரசினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை மறுசீரமைப்புச் சட்டமூலம் ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி (SJB) அண்மையில் ஆர்ப்பாட்டம்

    Subscribe to our WhatsApp Channel

    INTRO :

    அரசினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை மறுசீரமைப்புச் சட்டமூலம் ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி (SJB) அண்மையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

    இந்த ஆர்ப்பாட்டம் செப்டம்பர் 24 (24.09.2026) அன்று பத்தரமுல்ல, பால்தூவ சந்தியில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் புகைப்படங்கள் எனக் கூறி பல புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்தன.

    எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

    தகவலின்விவரம் (What is the claim):

    Claim 01

    Facebook Link | Archived Link

    பத்தரமுல்ல பகுதியில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டம் எனக் குறிப்பிட்டு, நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் பெருந்திரளான மக்கள் கூடியிருப்பதாகக் காட்டும் ட்ரோன் புகைப்படமாக இப்புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது.

    Claim 02

    Facebook Link | Archived Link

    மேலும், குறிப்பிட்ட போராட்டத்திற்கு மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மக்களே வருகை தந்திருந்தனர் என்பதை சுட்டிக்காட்டும் வகையிலும், எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்ட உண்மையான புகைப்படத்துடன் ஒப்பிட்டும் ட்ரோன் காட்சியாக புகைப்படமொன்று சமூக ஊடகங்களில் மேலுள்ளவாறு பகிரப்பட்டிருந்தது.

    இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    Claim 01

    அரசினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை மறுசீரமைப்புச் சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் “ஜனநாயகத்தை அழிக்கும் 22 வேண்டாம்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்றது.

    பிரதான ஊடகங்கள் உட்பட உத்தியோகபூர்வ மற்றும் நம்பகமான மூலாதாரங்கள் மூலமாகவும், ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல்வாதிகள் உட்பட கட்சியின் உத்தியோகபூர்வ சமூக ஊடகப் பக்கங்கள் மூலமாகவும் போராட்டத்தின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளமை காணக்கிடைத்தது. 

    இருப்பினும், மேலே குறிப்பிடப்பட்ட சமூக ஊடகப் பதிவில் உள்ள புகைப்படம் எந்தவொரு பிரதான ஊடகத்திலோ, நம்பகமான மூலாதாரங்களிலோ அல்லது ஐக்கிய மக்கள் சக்தியின் உத்தியோகபூர்வ சமூகவலைத்தளக் கணக்குகளிலோ வெளியிடப்படவில்லை. அதுபோன்ற எந்தவொரு காட்சியும் அந்த உத்தியோகபூர்வ பதிவில் பதிவிட்டிருக்கவில்லை.

    1. ட்ரோன் காட்சிகள் வெளியிடப்படவில்லை

    ஊடகங்கள் அல்லது உத்தியோகபூர்வ மூலாதாரங்கள் மூலம் கடந்த 24ஆம் திகதி நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) போராட்டத்திற்குத் தொடர்புடைய ட்ரோன் காட்சிகள் எதுவும் வெளியிடப்படவில்லை. மாறாக, முன்னணி உத்தியோகபூர்வ ஊடக நிறுவனங்கள் அன்றைய சம்பவத்தை தரை வழியிலிருந்து எடுக்கப்பட்ட காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் மூலமே செய்தி சேகரித்திருந்தமை காணக்கிடைத்தது.

    2. நாடாளுமன்ற நிலப்பரப்புடன் ஒப்பிடல்

    மேற்கண்ட புகைப்படத்தில் நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு முன்னால் மூன்று பாதைகளைக் காண முடிகிறது.

    இருப்பினும், உண்மையான இலங்கை நாடாளுமன்ற நுழைவாயில் அமைந்துள்ள பகுதி மேலே உள்ள புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ள பின்னணியில் இருந்து வேறுபட்டதாகும். மேலும், நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் அவ்வாறு மூன்று பாதைகள் அமைந்திருக்கவில்லை. 

    இதனை Google Maps தளத்தில் இலங்கை நாடாளுமன்றத்தின் தோற்றத்தினை அடிப்படையாக கொண்டு தெளிவாக அடையாளம் காண முடியும்.

    3. புகைப்படத்தில் உள்ள செயற்கைத் தன்மை

    பிரதான ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் மூலம் அன்றைய தினம் பத்தரமுல்ல பகுதியில் மழைக்காலநிலை நிலவியமை தெளிவாகிறது. 

    போராட்டக்காரர்கள் குடைகளைப் பிடித்துக்கொண்டு மழையில் நின்ற காட்சிகளே காணப்பட்டனவே அன்றி, மேலே உள்ள புகைப்படத்தில் உள்ளது போன்று தெளிவான வெயில் உள்ள வானிலையில் வான்வழியாக எடுக்கப்பட்ட ட்ரோன் காட்சிகள் எதையும் ஊடகங்கள் வெளியிடவில்லை.

    மேலும், மேலே உள்ள புகைப்படத்தில் கூடியிருக்கும் மக்கள் தேசியக் கொடிகளை ஏந்தியிருப்பதை அவதானிக்க முடிகிறது. ஆனால் பிரதான ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை நன்கு அவதானிப்பதன் மூலம் மக்கள் அவ்வாறு தேசியக் கொடிகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபடவில்லை என்பது தெளிவாகிறது.

    4. தாமரைக் கோபுரத்தின் அமைப்பு

    அத்துடன், இப்புகைப்படத்தில் இலங்கை நாடாளுமன்ற வளாகம் சித்தரிக்கப்பட்டுள்ளது. கொழும்பு தாமரைக் கோபுரம் (Lotus Tower) McCallum வீதியில் (கொழும்பு 10) அமைந்துள்ளது. இந்த இரண்டு இடங்களுக்கும் இடையிலான நிலப்பரப்புத் தூரம் அண்ணளவாக 12 கிலோமீட்டருக்கும் அதிகமாகும். புகைப்படத்தின் மேல் இடது மூலையில் தாமரைக் கோபுரம் மிகவும் அருகிலும் தெளிவாகவும் தெரியும்படி காட்டப்பட்டுள்ளது. 

    ஆனால் உண்மையாக பத்தரமுல்ல பகுதியில் இருந்து பார்க்கும்போது, கொழும்பு நகரிலுள்ள பிற உயரமான கட்டடங்கள் மற்றும் தடைகள் காரணமாக தாமரைக் கோபுரம் இந்தத் திசையில் இவ்வளவு அருகிலும் தெளிவாகவும் தெரியாது.

    மேலும், இப்புகைப்படத்தை நெருக்கமாக உற்றுநோக்கும் போது, அதிலுள்ள மனித உருவங்களின் வடிவங்கள் தெளிவாக இல்லாமல் ஒன்றோடொன்று கலந்த நிலையைக் காட்டுகின்றன. இது செயற்கை நுண்ணறிவு (AI) புகைப்படங்களில் பொதுவாகக் காணப்படும் ஒரு பண்பாகும்.

    5. செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படம்

    இதன் காரணமாக, குறிப்பிட்ட புகைப்படத்தை செயற்கை நுண்ணறிவு உள்ளடக்கங்களைக் கண்டறியும் கருவி மூலம் ஆய்வுக்கு  உட்படுத்தினோம். அதில், அப்புகைப்படம் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டது.

    Claim 02

    அதிஉயர் பாதுகாப்பு வலயத்தில் ட்ரோன் காட்சி எடுக்க தடை

    இலங்கை நாடாளுமன்றத்திற்கு அருகிலுள்ள பகுதி அதிஉயர் பாதுகாப்பு வலயமாகும் என்பதால், அங்கு ட்ரோன் காட்சிகளை எடுப்பதோ அல்லது ட்ரோன் விமானங்களை பறக்கவிடுவதோ முடியாது. 

    அதற்கமைய, நாம் மேலே குறிப்பிட்டது போல், ஐக்கிய மக்கள் சக்தியின் உத்தியோகபூர்வ சமூக ஊடகங்கள் மூலமாகவோ அல்லது பிரதான ஊடகங்கள் மூலமாகவோ போராட்டத்தின் ட்ரோன் காட்சிகள் எடுக்கப்படவோ அல்லது வெளியிடப்படவோ இல்லை.

    மேலும், இப்புகைப்படத்தை மிகவும் அவதானமாக உற்றுநோக்கும் போது, இது ஒரு உண்மையான ட்ரோன் புகைப்படம் அல்ல என்பதை உறுதிப்படுத்தும் பல இயற்கைக்கு மாறான அம்சங்களை தெளிவாகக் காண முடிகிறது:

    • புகைப்படத்தின் நடுவில் உள்ள மக்கள் கூட்டம் :

      சாதாரண கூட்ட நெரிசலின் போது மக்கள் பாதை முழுவதும் பரவியிருப்பார்கள். ஆனால், இங்கு அவர்கள் ஏதோ ஒரு குறிப்பிட்ட வடிவத்திற்குள் அடைத்து வைக்கப்பட்டது போல் தோன்றுகிறது.

    • சுற்றியுள்ள பின்னணிக்கும் கூட்டத்திற்குமான முரண்பாடு:

      சுற்றியுள்ள மரங்கள் மற்றும் பாதையின் மேல் பகுதி ஒப்பீட்டளவில் தெளிவாகத் தெரிகிறது. ஆனால், நடுவில் மக்கள் இருக்கும் பகுதி மட்டும் அளவுக்கு அதிகமாக மங்கலாக (blur) உள்ளது.

    ஆகவே நாம் குறித்த புகைப்படம் உண்மையானதா என கண்டறிய செயற்கை நுண்ணறிவை கண்டறியும் கருவியினை பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டபோது, இது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புகைப்படம் என கண்டறியப்பட்டது.

    ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பிரிவு

    சமூக ஊடகங்களில் பரவி வரும் மேற்கண்ட புகைப்படங்கள் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் ஊடகப் பிரிவினை நாம் தொடர்புக்கொண்டு  வினவினோம். குறிப்பிட்ட புகைப்படங்கள் செயற்கை நுண்ணறிவால் (AI) உருவாக்கப்பட்டவை என்றும், தாம் அத்தகைய புகைப்படங்களை ஒருபோதும் பயன்படுத்தவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். 

    மேலும், இலங்கை நாடாளுமன்றத்திற்கு அருகிலுள்ள பகுதி அதிஉயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட பகுதி என்பதால், அப்பகுதியில் ட்ரோன் விமானங்களை பறக்கவிட முடியாது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

    மேலும், இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் அலுவலக உத்தியோகபூர்வ சமூக ஊடகக் கணக்கிலும் பதிவொன்று இடப்பட்டுள்ளது. 

    கடந்த 24ஆம் திகதி நடைபெற்ற போராட்டத்தின் புகைப்படங்கள் எனக் கூறி செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருவதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதுபோன்ற போலி பதிவுகளை பகிர வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பிரிவு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது என எமக்கு தெரிவித்தனர். 

    ஊடகவியலாளர்கள்

    அத்துடன்,குறித்த ஆர்ப்பாட்டத்தினை நேரடியாக செய்தி சேகரித்த சில ஊடகவியலாளர்களை நாம் தொடர்புக்கொண்டு இது குறித்து வினவிய போது, சமூக ஊடகங்களில் காணப்படும் புகைப்படங்கள் குறிப்பிட்ட போராட்டத்தின் உண்மையான காட்சிகள் அல்ல என்பதை அவர்களும் உறுதிப்படுத்தினர்.

    நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், பத்தரமுல்லையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்தின் ட்ரோன் காட்சி என பகிரப்படும் புகைப்படம் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளி என கண்டறியப்பட்டது.

    எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  |TikTok | Youtube

    Conclusion: முடிவு

    எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

    Result Stamp

    Title: பத்தரமுல்லையில் நடைபெற்ற SJBயின் போராட்டத்தின் ட்ரோன் காட்சி என சமூக ஊடகங்களில் பரவும் AI புகைப்படம்

    Fact Check By: S.G.Prabu

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2026-09-28

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.