Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கிய நபரை காப்பாற்றிய யானை என பரவும் காணொளி உண்மையா..?

    කරුණු විමර්ශනය කිරීම
    2026-08-28
    3 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    Subscribe to our WhatsApp Channel INTRO : நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கிய நபரை காப்பாற்றிய யானை என சமூக வலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண

    Subscribe to our WhatsApp Channel


    INTRO :

    நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கிய நபரை காப்பாற்றிய யானை என சமூக வலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

    தகவலின்விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link 

    சமூகவலைத்தளங்களில் “🌊🐘 நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கிய நபரை காப்பாற்றிய யானை! 😱❤️

    நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் ஒருவர் சிக்கித் தவித்த நிலையில், அவரை நோக்கி வந்த யானை தனது தும்பிக்கையை நீட்டி பாதுகாப்பாக கரைக்கு அழைத்துச் செல்லும் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி தற்போது கவனம் பெற்றுள்ளது. 🐘🤝

    மனிதர்களுக்கு மட்டுமல்ல… விலங்குகளுக்கும் இரக்கம், அன்பு, பாதுகாக்கும் உணர்வு இருக்கிறது என்பதை உணர்த்தும் நெகிழ்ச்சியான தருணம்! ❤️

    🎥 பாருங்கள்… பகிருங்கள்!

    👉 இந்த யானையின் மனிதநேயத்திற்கு ஒரு ❤️ லைக் போடுங்கள்!

    #Nepal #Flood #ElephantRescue #Elephant #Rescue #ViralVideo #AmazingMoment #Humanity #AnimalLove #KiyasViews” என இம் மாதம் 27 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு  (27.08.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    நேபாள வெள்ளப் பெருக்கின் போது வெள்ளத்திலிருந்து தப்பிப் பாதுகாப்பான இடத்திற்கு செல்வதற்கு யானையொன்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நபருக்கு உதவும் வகையிலான காணொளி எதுவும் பிரதான ஊடகங்களால் வெளியிடப்பட்டுள்ளதா எனப் பரிசோதித்த போது, அத்தகைய காணொளி எதுவும் ஊடகத்தினால் வெளியிடப்பட்டதாக எம்மால் அவதானிக்கப்படவில்லை.

    இதன் காரணமாக, குறித்த காணொளியின் சில காட்சிகளை நாம் புகைப்படமாக மாற்றி Reverse Image தேடலுக்கு உட்படுத்தினோம்.

    அந்த தேடலின் போது, இது இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்ட பருவமழை வெள்ளப் பெருக்குடன் தொடர்புடைய ஒரு சம்பவம் எனக் குறிப்பிடப்பட்டு, 2026 ஆகஸ்ட் 9 ஆம் திகதி முதலே, அதாவது நேபாளத்தில் கடந்த 26 ஆம் திகதி ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு நிலைமைக்கு முன்னரே  இணையத்தில் பதிவேற்றப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.


    இருப்பினும், இக்காணொளியில் காணப்பட்ட சில காட்சிகள் அசாதாரணத் தன்மையின் அடிப்படையில், 

    இது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட ஒரு காணொளியாக  இருக்கலாம் என சந்தேகம் எழ நாம் குறித்த காணொளியினை செயற்கை நுண்ணறிவு கண்டறியும்  உரிய கருவி மூலம் பரிசோதித்த போது, இது AI மூலம் உருவாக்கப்பட்ட காணொளி என்பது கண்டறியப்பட்டது.



    இதன்படி, இது உண்மையான காணொளி அல்ல, மாறாக செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டு ஆகஸ்ட் 09 ஆம் திகதி முதல் இணையத்தில் பகிரப்பட்டு வரும் ஒரு காணொளி என கண்டறியப்பட்டது.

    நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கிய நபரை காப்பாற்றிய யானை என பரவும் காணொளி செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டது என கண்டறியப்பட்டது.

    எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  |TikTok | Youtube

    Conclusion: முடிவு


    எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

    Result Stamp

    Title: நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கிய நபரை காப்பாற்றிய யானை என பரவும் காணொளி உண்மையா..?

    Written By: S.G.Prabu

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2026-08-28

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.