Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    இந்தோனேசியாவின் காட்டுப் பகுதியில் காணப்பட்ட பழங்கால சிவலிங்கமா இது?

    කරුණු විමර්ශනය කිරීම
    2021-01-14
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :இந்தோனேசியாவின் காட்டுப் பகுதியில் காணப்பட்ட பழங்கால சிவலிங்கம் என ஒரு வீடியோ இணையத்தில் பரவி வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானத

    INTRO :
    இந்தோனேசியாவின் காட்டுப் பகுதியில் காணப்பட்ட பழங்கால சிவலிங்கம் என ஒரு வீடியோ இணையத்தில் பரவி வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    Manushi Manushi என்ற பேஸ்புக் கணக்கில் ” இந்தோனேசியாவின் காட்டுப் பகுதியில் காணப்பட்ட பழங்கால சிவலிங்கம். இதில் தண்ணீர் ஊற்றெடுத்து பாய்வதை பாருங்கள்.”  என இம் மாதம் 08 ஆம் திகதி  (08.01.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    பலரும் இதன் உண்மை தன்மையினை கண்டறியாமல் பகிர்ந்திருந்தமை எமக்கு காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்) 

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

    முதலில் நாம் குறித்த வீடியோ பதிவில் அவர் பேசியுள்ளதை நன்கு அவதானித்து கேட்டால் அவரின் மொழி நடையானது, மலேசிய தமிழர்களின் மொழி நடையை ஒத்துள்ளமை கண்டறியப்பட்டது.

    மேலும் அவர் குறித்த வீடியோ ஆரம்பத்திலேயே, காரக் அதிவேக வீதியில் இருந்து 10 கிலோ மீற்றர் தூரத்தில் காட்டுக்குள் அமைந்துள்ள சிவன் கோயில் என அவர் தெரிவித்துள்ளார்.

    நாம் கூகுள் தேடு தளத்தில் karak highway என தேடிய போது, அது மலேசியாவில் அமையப்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டது.

    மேலும் இது குறித்து ஆய்வினை மேற்கொள்ள மலேசியர் ஒருவரின் உதவியுடன் குறித்த சிவன் கோயில் அமைவிடத்தினை நாம் கண்டறிந்து கொண்டோம்.

    Google Search

    நாம் குறித்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு காரக் அதிவேக வீதியிலிருந்து சிவன் ஆலயத்தின் இருப்பிடத்தினை கூகுள் மேப் உதவியில் தூரத்தினை கணித்தப்போது 13 கிலோ மீற்றர் முதல் 15 கிலோ மீற்றர் வரையான தூரமே காணப்பட்டது.

    மேலும் யூடியுப் தளத்தில் குறித்த இடத்திற்கு விஜயம் சென்ற நபர்கள் வெளியிட்டிருந்த காணொளியும் கிடைக்கப்பெற்றது.

    இந்தோனேசியாவின் காட்டுப் பகுதியில் காணப்பட்ட பழங்கால சிவலிங்கம் வீடியோ குறித்து நாம் மேற்கொண்ட தேடலின் போது, இது மலேசியாவில் அமைந்துள்ள கோயில் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

     Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். 

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:இந்தோனேசியாவின் காட்டுப் பகுதியில் காணப்பட்ட பழங்கால சிவலிங்கமா இது?

    Fact Check By: Nelson Mani 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    NM

    Nelson Mani

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2021-01-14

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.