
INTRO :
பாராளுமன்ற உறுப்பினரான நாமலின் கைதிற்கு பின்னர் அவருக்கு ஆதரவாக களமிறங்கிய தமிழ் அரசியல் வாதிகள் என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):
Claim 01

சமூகவலைத்தளங்களில் “நரி அரசியல்வாதிகள் இவர்கள் உங்கள் கருத்து என்ன? கள்வனை காப்பாற்றத்துடிக்கும் இந்த கள்வர்களின் உண்மையான முகம் தான் என்ன?
#puttalamapi” என இம் மாதம் 07 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு (07.09.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Claim 02

சமூகவலைத்தளங்களில் “நாமலுக்காக அனைவரும் ஒன்று சேரவெண்டும்” என இம் மாதம் 07 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு (07.09.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Claim 03

சமூகவலைத்தளங்களில் ““முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ, நாமல் ராஜபக்ச போன்ற இளைஞர்கள் எதிர்காலத்தில் எமது ஜனாதிபதியாக வர வேண்டும். நாமல் ராஜபக்ச விடுதலை பெற அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள்.” — ரவூப் ஹக்கீம் – உங்கள் கருத்தை பதிவிடவும்” என இம் மாதம் 07 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு (07.09.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷவின் கைதிற்கு பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான் மற்றும் ரவூப் ஹக்கீம் தெரிவித்ததாக சமூகவலைத்தளங்களில் பரவிவருகின்ற கருத்துகள் அவ்வாறு அவர்கள் தெரிவித்ததாக எந்த பிரதான ஊடகங்களிலும் செய்திகளாக வெளியாகி இருக்கவில்லை.
பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் பேஸ்புக் பதிவு
ஆகவே நாம் முதலில் பாராளுமன்ற உறுப்பினரான முஜிபுர் ரஹ்மானின் சமூகவலைத்தளங்களை ஆய்வு செய்தபோது, அவர் குறித்த பதிவானது தவறானது என்று பதிவிட்டிருந்த பதிவு எமக்கு கிடைக்கப்பெற்றது.
அத்துடன் அவர் இது தொடர்பாக தெளிவான விளக்கத்தினை காணொளி வடிவில் பதிவேற்றியிருந்தமையும் காணக்கிடைத்தது. அதில் அவர் தனது அரசியல் பயணத்தில் இதுவரைக்கு நாமல் ராஜபக்ஷவிற்கு மற்றும் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக பேசியதும் இல்லை அவர்களுக்கு ஆதரவாக வாக்களித்தும் இல்லை. மேலும் அவர்களை தோற்கடிப்பதற்காக தான் என்னுடைய அரசியல் பயணம் இருந்ததாக தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக மேலதிக தகவல்களை பெற நாம் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு வினவியபோது, இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி என்றும், புதிய அரசியல் கலாச்சாரத்தினை கொண்டு வருவதாக வந்த இந்த அரசாங்கம் இதற்கு முந்தைய காலங்களில் இருந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் செய்த அதே காரியத்தினை பின்பற்றி வருவதாகவும் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமின் பேஸ்புக் பதிவு
பாராளுமன்ற உறுப்பினரான ரவூப் ஹக்கீம் தொடர்பாக பரவிவருகின்ற பதிவுகள் குறித்து ஆய்வினை மேற்கொண்டபோது, அவரின் உத்தியோகப்பூர்வ சமூகவலைத்தளங்களை நாம் ஆய்வு செய்தோம், குறித்த ஆய்வின் தற்போது நாமலின் கைதுடன் அவர் தெரிவித்ததாக பரவுகின்ற தகவல் தவறானது என்று பதிவிட்டிருந்த பதிவு எமக்கு கிடைக்கப்பெற்றது
மேலும் அவரை தொடர்புக்கொண்டு மேலதிக தகவல்களை பெற நாம் முயற்சித்த போது, அவரை தொடர்புக்கொள்ள இயலாமல் போனது. அவரை தொடர்புக்கொண்டு இந்த ஆய்வறிக்கையினை புதுப்பிக்கின்றோம்.
நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், நாமலின் கைதிற்கு பின்னர் அவருக்கு ஆதரவாக களமிறங்கிய தமிழ் அரசியல் வாதிகள் என பகிரப்படும் தகவல் தவறானது என கண்டறியப்பட்டது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.



