
INTRO :
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினை மையமாக கொண்டு பல காணொளிகள் இணையத்தில் பகிரப்பட்டு வந்தமை காணக்கிடைத்தது. அதற்கமைய இந்தியாவில் உள்ள ஒரு நீரிணை குறித்த வெள்ளத்தினால் முழுமையாக நிரம்பியதாகவும் மேலும் பனிக்கட்டி உருகி விழும் காட்சிகள் என சமூக வலைத்தளங்களில் சில காணொளிகள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):
Claim 01
சமூகவலைத்தளங்களில் “🚨 #நேபாள வெள்ளம் – #இந்திய அணை வெள்ள நீரை தடுத்து நிறுத்தியது!
“#நேபாளத்தில் பேரழிவு – #இந்திய அணை மேலும் பேரிடரை தடுத்தது!”
👉 #நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தை அடுத்து, #இந்தியாவில் உள்ள ஒரு அணை வெள்ள நீரை தடுத்து நிறுத்தியுள்ளது.
👉 இந்த நடவடிக்கை, மேலும் பேரழிவு ஏற்படுவதை தடுத்துள்ளது. அணையின் நீர்மட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
#NepalFloods #IndiaDam #FloodControl #DisasterManagement #Safety
📰 செய்திகளை உடனுக்குடன் பெற… 🔔
எங்களின் Facebook மற்றும் Instagram பக்கங்களை Like ❤️ & Follow ✅ செய்து இணைந்திருங்கள்.
📘 Facebook: https://www.facebook.com/share/18ZnDVZuXX/
📷 Instagram: https://www.instagram.com/colombopostnews?igsh=MXRqOXVtcHl2eXk4ZA==
🙏 உங்கள் ஆதரவே எங்களின் பலம். தொடர்ந்து நம்பகமான செய்திகளை வழங்க உறுதியளிக்கிறோம்.” என கடந்த மாதம் 28 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு (28.08.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Claim 02
சமூகவலைத்தளங்களில் “🇳🇵🌊 நேபாளம்–இமயமலை திபெத் எல்லையில் பனிப்பாறை உருகி வெள்ளப் பெருக்காக உருமாறும் காட்சி
#நேபாளம் #Tibet #NepalFloods #FlashFlood #Himalayas #GlacialCollapse #நேபாளம் #திபெத் #வெள்ளம் #இமயமலை #இயற்கைபேரிடர் #பேரழிவு #மக்கள்” என கடந்த மாதம் 27 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு (27.08.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
Claim 01
நேபாள வெள்ளத்தின் பின்னர் இந்திய அணை மேலும் பேரிடரை தடுத்தது என பதிவிட்டு பகிரப்படும் காணொளி தொடர்பாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதா என ஆய்வினை மேற்கொண்டபோது, இவ்வாறான சம்பவம் எதுவும் செய்திகளில் காணக்கிடைக்கவில்லை.
நாம் எமது இந்திய பிரிவினை தொடர்புக்கொண்டு இது தொடர்பாக வினவியபோது, குறித்த நீரிணை இருக்கும் இடத்திற்கும் நேபாளத்திற்கும் இடையில் பாரிய தூரம் காணப்படுவதாக தெரிவித்தனர்.
மேலும், குறித்த நீரிணை சமீபத்தில் இவ்வாறு முழுமையாக நிரம்பி காணப்படவில்லை எனவும் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் இடம்பெற்றதாக இருக்கலாம் என தெரிவித்தனர்.
குறித்த Bhatsa நீரிணை தொடர்பாக இணையத்தில் வெளியான செய்திகளை நாம் ஆய்வு செய்தமைக்கு அமைய, கடந்த ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி வெளியாகியிருந்த செய்தி எமக்கு கிடைத்தது. Link 1
நாம் கூகுள் மேப் உதவியுடன் குறித்த நீரிணை இருக்கும் இடத்தினையும், நேபாளத்தினையும் ஆய்வு செய்கையில், இரு இடங்களுக்குமான தூரம் மற்றும் இரு இடங்கள் அமைந்திருக்கும் பகுதிகளை அவதானித்தபோது, சமூகவலைத்தளங்களில் பகிரப்படுவதை போன்று, குறித்த நீரிணை நேபாள வெள்ளத்தினால் நிரம்பி இருப்பதற்கான வாய்ப்புக்கள் மிகவும் அரிதானது என கண்டறிய முடிந்தது.

மேலும் குறித்த காணொளி கடந்த மாதம் 6 ஆம் திகதி (06.08.2026) Jansampark News பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Claim 02
வைரலாகும் காணொளியின் உண்மைத்தன்மை குறித்து கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் செய்து ஆய்வினை மேற்கொண்டபோது, Karmactive என்ற பேஸ்புக் பக்கத்தில் வைரலாகும் அதே காணொளி இரண்டு வாரங்களுக்கு முன்பு பதிவிடப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது. அதில், இந்நிகழ்வு பாகிஸ்தானில் உள்ள ஜில்ஜிட் மலையில் உள்ள பனிக்கட்டியாறு உருகியதால் ஏற்பட்ட வெள்ளம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எமது ஆய்வின் மூலம் குறித்த காணொளியானது நேபாள நிலச்சரிவு ஏற்பட்ட ஆகஸ்ட் 26 ஆம் திகதிக்கு முன்பாகவே இணையத்தில் பகிரப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.
இதுதொடர்பாக ஆய்வினை மேற்கொள்கையில் The Savera Times என்ற ஆங்கில ஊடகமும் இதே காணொளியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த மார்ச் 13 ஆம் திகதி பதிவிட்டு, பாகிஸ்தானில் பனிக்கட்டியாறு உருகி வெள்ளம் ஏற்பட்டது என்று குறிப்பிட்டுள்ளமை கண்டறியப்பட்டது.
நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், நேபாள வெள்ளத்துடன் தொடர்பு படுத்தி பகிரப்பட்ட காணொளிகள் பகிரப்படும் தகவல் தவறானது என கண்டறியப்பட்டது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.



