Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    நுவரெலியாவின் பனிப்பொழிவு புகைப்படம் உண்மையானதா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2022-01-05
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :நுவரெலியாவின் பல பகுதிகள் பனிப்பொழிவு காணப்பட்டதாக என சமூக வலைத்தளங்கள் புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியான

    INTRO :
    நுவரெலியாவின் பல பகுதிகள் பனிப்பொழிவு காணப்பட்டதாக என சமூக வலைத்தளங்கள் புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ” இன்று நுவரெலியாவின் பல பகுதிகளில் பனிப்பொழிவு காணப்பட்டுள்ளதாக தெரிய வந்தது “ என கடந்த வருடம் டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி (24.12.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

    நாம் பகிரப்பட்டிருந்த அனைத்து புகைப்படங்களையும் கூகுள் ரிவஸ் இமேஜ் பயன்படுத்தி ஆய்வுக்கு உட்படுத்திய போது, அதில் சில 2015 ஆம் ஆண்டில் நுவரெலியாவில் ஏற்பட்ட பனிப்பொழிவின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என கண்டறியப்பட்டது.


    அசல் பதிவினை காணுவதற்கு :- lankadeepa.lk I Archive 2

    மேலும் இது குறித்து ஆய்வினை மேற்கொண்ட போது, அதில் பதிவிட்ட மேலும் சில புகைப்படங்கள் 2009 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என எமக்கு கண்டறியப்பட்டது.

    குறித்த புகைப்படத்தினை M.RISHAN SHAREEF என்பவரின் blog பக்கத்தில் பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    அசல் பதிவினை காணுவதற்கு :- mrishaanshareef.blogspot.com I Archive 2

    நாம் கடந்த வருடம் (2021) நுவரெலியாவில் பனிப்பொழிவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தேடிய போது, இது தொடர்பாக பதிவாகியிருந்த செய்தி எமக்கு கிடைத்தது.

    அதில் நுவரெலியாவில் பனிப்பொழிவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எம்மால் காணக்கிடைத்து.

    அசல் பதிவினை காணுவதற்கு :- virakesari.lk I Archive 1 

    நாம் கடந்த 2020 ஆம் ஆண்டும் நுவரெலியாவில் பெய்த பூப் பனி என பகிரப்பட்ட புகைப்படம் தொடர்பில் மேற்கொண்ட ஆய்வறிக்கை

    எனவே நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், நுவரெலியாவின் பனிப்பொழிவு புகைப்படம் என பகிரப்படும் புகைப்படங்கள் 2009 மற்றும் 2015 ஆம் வருடங்கள் நுவரெலியாவில் பனிப்பொழிவின் போது எடுக்கப்பட்டவை என கண்டறியப்பட்டுள்ளது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். 

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:நுவரெலியாவின் பனிப்பொழிவு புகைப்படம் உண்மையானதா?

    Fact Check By: S G Prabu 

    Result: Missing Context

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2022-01-05

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.