Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல்வாதிகளின் வீடுகளா இவை?

    කරුණු විමර්ශනය කිරීම
    2021-09-29
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO : இலங்கை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அமைச்சர்களின் வீடுகள் என சில புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல்

    INTRO :

    இலங்கை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அமைச்சர்களின் வீடுகள் என சில புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook link | Archived link

    “போதுமா சார் இல்லை இன்னும் வேணுமா” என கடந்த மாதம் 22 ஆம் திகதி   (22.08.2021) குறித்த பதிவினை பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது. மேலும் குறித்த பதிவானது 2020 ஆம் ஆண்டு முதல் இணையத்தில் பகிரப்பட்டுள்ளமையும் எமது ஆய்வில் தெரியவந்தது.

    பலரும் குறித்த பதிவினை உண்மையென நம்பி பகிர்ந்துள்ளனர்.

    Fact Check (உண்மை அறிவோம்)

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

    நாம் பகிரப்பட்டுள்ள ஒவ்வொரு புகைப்படத்தினையும் கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வுக்கு உட்படுத்தினோம்.

    மாவை சேனாதிராசாவின் யாழ்ப்பாண வீடு என பகிரப்பட்ட புகைப்படமானது, மினுவாங்கொட பகுதியில் வீடு விற்பனைக்கான இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்த வீட்டின் புகைப்படமாகும்

    link | Archived link

    ஸ்ரீதரனின் வட்டக்கச்சி வீடு என பகிரப்பட்ட புகைப்படமானது அம்பாந்தோட்டையில் அமைந்துள்ள ஒரு விடுதி ஒன்றாகும்

    Link | Archived link

    மாவை சேனாதிராசாவின் சென்னை வீடு என பகிரப்பட்ட புகைப்படமானது, சீதுவ பகுதியில் வீடு விற்பனைக்கான இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்த வீட்டின் புகைப்படமாகும்

    Link | Archived link

    சம்பந்தனின் சென்னை வீடு என பகிரப்பட்டுள்ள புகைப்படமானது கொழும்பு கொட்டாவ பகுதியில் அமைந்துள்ள ஒரு விடுதியின் புகைப்படம் என எமது கூகுள் ரிவஸ் இமேஜ் தேடலின் மூலம் கண்டறிந்தோம்.

    Link | Archived link

    இதைபோன்றே அரசியல்வாதிகளின் பெயரினை பயன்படுத்தி அவர்களின் இல்லம் என பகிரப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் அவர்களின் இல்லங்கள் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

    நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் வாதிகளின் வீடுகள் என பகிரப்படும் புகைப்படமானது முற்றிலும் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். 

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல்வாதிகளின் வீடுகளா இவை?

    Fact Check By: Nelson Mani 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    NM

    Nelson Mani

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2021-09-29

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.