Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    நடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் பரிசு; உண்மை என்ன?

    කරුණු විමර්ශනය කිරීම
    2020-09-24
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    நடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் ரூ.1 லட்சம் பரிசு தருவேன் : அர்ஜூன் சம்பத் தெரிவித்ததாகவும் அதற்கு நடிகர் சூர்யா என்னை அடிப்பதால்  ஒரு லட்சம் கிடைக்கும் என்றால் அந்த வாய்ப்பை  ஏழை மாணவனுக்கு வழங்க தயார் என தெரிவித்தாக ஒரு செய்தி பேஸ்புக்கில் பகிரப்பட

    நடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் ரூ.1 லட்சம் பரிசு தருவேன் : அர்ஜூன் சம்பத் தெரிவித்ததாகவும் அதற்கு நடிகர் சூர்யா என்னை அடிப்பதால்  ஒரு லட்சம் கிடைக்கும் என்றால் அந்த வாய்ப்பை  ஏழை மாணவனுக்கு வழங்க தயார் என தெரிவித்தாக ஒரு செய்தி பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.

    தகவலின் விவரம்:

    Facebook Link | Archived Link

    Life News- தமிழ் என்ற பேஸ்புக் பக்கத்தில்  ” நடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் ரூ.1 லட்சம் பரிசு தருவேன் : அர்ஜூன் சம்பத்

    என்னை அடிப்பதால் ஒரு லட்சம் கிடைக்கும் என்றால் அந்த வாய்ப்பை ஏழை மாணவனுக்கு வழங்க தயார்–சூர்யா.

    இந்த வார்த்தையாலயே அர்ஜுன் சம்பத்தை செருப்பால் அடித்துவிட்டார் சூர்யா…

    வாழ்த்துக்கள்❤️.” என்று இம் மாதம் 19 ஆம் திகதி  (19.09.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

    குறித்த தகவல் பலராலும் பகிரப்பட்டு வந்துள்ளமை எமக்கு காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    நாம் குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமிர்த்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

    குறித்த தேடலின் போது, அர்ஜுன் சம்பத் செப்டெம்பர் மாதம் 19 ஆம் திகதியே அவரது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இது குறித்தான விளக்கத்தினை பதிவேற்றியிருந்தார்.

    Archived Link

    மேலும் நடிகர் சூர்யா தன்னை அடிக்கும் வாய்ப்பினை ஏழைக்குழந்தைக்கு வழங்க தயார் என தெரிவித்திருந்த செய்தி இணையத்தில் வெளியாகியுள்ளதா என்று தேடிய வேளையில் அவ்வாறான செய்திகள் எமக்கு எங்கும் கிடைக்கவில்லை.

    அவரின் உத்தியோகப்பூர்வ சமூகவலைத்தளங்களிலும் இவ்வாறான எவ்விதமான செய்திகளும் வெளியாகி இருக்கவில்லை.

    மேலும் எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட தேடுதலின் போது, இந்து மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் தர்மா என்பவர் நடிகர் சூர்யாவை யாரேனும் செருப்பால் அடித்தால், அர்ஜுன் சம்பத், தலைமையில், ஒரு லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என தெரிவித்திருந்தமை கண்டுப்பிடிக்கப்பட்டிருந்தது.

    எமது இந்திய தமிழ் பிரிவினரின் ஆய்வு அறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

    நாம் மேற்கொண்ட தேடுதலில் அடிப்படையில் இந்து மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் தர்மா பேசியதை அர்ஜூன் சம்பத் மற்றும் சூர்யாவை தொடர்புபடுத்தி ஒரு சிலர் வதந்தியை உருவாக்கி, பகிர்ந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:நடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் பரிசு; உண்மை என்ன?

    Fact Check By: Nelson Mani 

    Result: Partly False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    NM

    Nelson Mani

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2020-09-24

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.