Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    ஜெர்மனியில் மேகக்கூட்டம் திரண்டு, அதிலிருந்து பாங்கு சப்தம் கேட்டதா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2021-12-30
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :ஜெர்மனியில் மேகக்கூட்டம் திரண்டு அதிலிருந்து பாங்கு சப்தம் கேட்டதாக ஒரு வீடியோ என  சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குற

    INTRO :
    ஜெர்மனியில் மேகக்கூட்டம் திரண்டு அதிலிருந்து பாங்கு சப்தம் கேட்டதாக ஒரு வீடியோ என  சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ” *ஜெர்மனியில் திடீரென மேகக்கூட்டம் திரண்டு அதிலிருந்து பாங்கு சப்தம் ஒலித்து இருக்கிறது அதை மக்கள் பிடித்த காட்சிதான் இது.இந்த செய்தியை அல் ஜஸீரா தொலைகாட்சி வெளியிட்டுள்ளார்கள்*😍🤲🏻

    Allahu Akbur “ என இம் மாதம் 25 ஆம் திகதி (25.12.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது. 

    Fact Check (உண்மை அறிவோம்)

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

    முதலில் நாம் குறித்த வீடியோவை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, இது 2020 ஆம் ஆண்டு இடம் பெற்ற சம்பவத்துடன் தொடர்புடையது என கண்டறியப்பட்டது.

     yenisafak.com I Archive

    மேலும், நாம் யூடியுப் தளத்தில் germany mosque prayer in covid என்று நாம் தேடுதலில் ஈடுப்பட்ட போது, Ruptly என்ற அலைவரிசையில் பதிவாகியிருந்த வீடியோ பதிவு எமக்கு கிடைத்தது.

    குறித்த வீடியோவும், இணையத்தில் பகிரப்படும் வீடியோவும் ஒன்றாக அமைந்திருந்தமை எம்மால் காணக்கிடைத்தது.

    அதில், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தொழுகையை பொலிஸார் தடுத்து நிறுத்தியதாக செய்திகள் பதிவாகியிருந்தன.

    எனவே, நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், ஜெர்மனியில் மேகக்கூட்டம் திரண்டு அதிலிருந்து பாங்கு சப்தம் வீடியோ போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.


    FACT CHECK: ஜெர்மனியில் மேகக் கூட்டத்தில் இருந்து பாங்கு சத்தம் கேட்டதா?

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். 

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:ஜெர்மனியில் மேகக்கூட்டம் திரண்டு, அதிலிருந்து பாங்கு சப்தம் கேட்டதா?

    Fact Check By: S G Prabu 

    Result: False

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2021-12-30

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.