Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    நடிகர் பந்து சமரசிங்க இத்தாலி நாட்டிற்கான துணைத் தூதுவராக நியமனமா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2022-04-23
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :இலங்கையின் பிரபலமான காமெடி நடிகரான பந்து சமரசிங்க இத்தாலி நாட்டிற்கான துணைத் தூதுவராக  நியமித்துள்ளதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில

    INTRO :
    இலங்கையின் பிரபலமான காமெடி நடிகரான பந்து சமரசிங்க இத்தாலி நாட்டிற்கான துணைத் தூதுவராக  நியமித்துள்ளதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ” இத்தாலியின் மிலன் நகரில் உள்ள இலங்கையின் தூதரக ஜெனரலாக மூத்த நடிகர் பண்டு சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக லங்காதீப தெரிவித்துள்ளது. “ என இம் மாதம் 14 ஆம் திகதி (14.04.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்) 

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

    நமது குழுவினர் இது தொடர்பாக ஆய்வினை மேற்கொண்ட போது, கடந்த 16 ஆம் திகதியன்று (16.04.2022) இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் இது குறித்தான ஊடகயறிக்கை வெளியானது. 

    அதில் நடிகர் பந்து சமரசிங்க இத்தாலி நாட்டிற்கான இலங்கை துணைத் தூதுவராக நியமிக்கப்படவில்லை என தெரிவித்திருந்தனர்.

    mfa.gov.lk | Archived Link

    இது தொடர்பாக கடந்த 18 ஆம் திகதியன்று நடிகர் பந்து சமரசிங்க அவரின் உத்தியோகப்பூர்வ யூடியுப் பக்கத்தில் இதுவரையில் எவ்விதமான பதவியிற்கும் எந்த அரசாங்கத்திடமிருந்து தாம் கோரிக்கை விடுத்திருக்கவில்லை என்றும், இத்தாலி நாட்டிற்கான துணைத் தூதுவராக தாம் நியமிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், இதுபோன்ற சமூக வலைத்தளப்பதிவுகளை நம்ப வேண்டாம் எனவும், தன்னை குறித்தான எதும் அறிவிப்பு இருந்தால் இலங்கை மக்களுக்கு தானே அறிவிப்பேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    Archived Link

    எனவே நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், நடிகர் பந்து சமரசிங்க இத்தாலி நாட்டிற்கான துணைத் தூதுவராக நியமனம் என பரவும் செய்தி போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். 

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:நடிகர் பந்து சமரசிங்க இத்தாலி நாட்டிற்கான துணைத் தூதுவராக நியமனமா?

    Fact Check By: S G Prabu 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2022-04-23

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.