Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    நேபாளத்தில் வெள்ளத்திற்கு முன்பு மற்றும் பின்பு என பரவும் காணொளி மற்றும் புகைபடங்கள் உண்மையா..?

    කරුණු විමර්ශනය කිරීම
    2026-09-03
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    Subscribe to our WhatsApp Channel INTRO : நேபாளத்தில் வெள்ளத்திற்கு முன்பு மற்றும் பின்பு என சமூக வலைத்தளங்களில் ஒரு காணொளி மற்றும் புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆ

    Subscribe to our WhatsApp Channel


    INTRO :

    நேபாளத்தில் வெள்ளத்திற்கு முன்பு மற்றும் பின்பு என சமூக வலைத்தளங்களில் ஒரு காணொளி மற்றும் புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

    தகவலின்விவரம் (What is the claim):

    Claim 01

    Facebook Link | Archived Link 

    சமூகவலைத்தளங்களில் “இயற்கையின் கோர தாண்டவம் 😭😭😭” என கடந்த மாதம் 27 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு  (27.08.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    Claim 02

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் “நேபாளம்  பெருவெள்ளத்திற்கு முன்பும், பின்பும் 😵” என கடந்த மாதம் 27 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு  (27.08.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    Claim 03

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் “எங்கே போனது எல்லாம்

    #பெருந்துயர்

    இயற்கை தன் தடத்தை வரைந்து போய்விட்டது நீரால் சேறால்

    #nepal

    #நேபாளம்

    ” என கடந்த மாதம் 30 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு  (30.08.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    நேபாள வெள்ளப் பெருக்கின் முன்னர் இருந்த இடம் தற்போது இவ்வாறு காட்சியளிக்கின்றது என பகிரப்படும் புகைப்படம் தொடர்பாக நாம் மேற்கொண்ட ஆய்வின் போது, இது நேபாள வெள்ளத்தின் பின்னர் குறித்த இடத்தின் புகைப்படம் என உறுதி செய்யக்கூடிய எவ்விதமான ஆதாரங்களும் எமக்கு கிடைக்கவில்லை.

    மேலும் நாம் gettyimages போன்ற புகைப்பட தொகுப்புகள் அடங்கிய இணையத்திலும் ஆய்வினை மேற்கொண்டபோது, நேபாள வெள்ளத்தின் பின்னரான புகைப்படங்கள் காணப்பட்டாலும், அதில் சமூகவலைத்தளத்தில் வைரலாகின்ற புகைப்படம் காணக்கிடைக்கவில்லை.

    Getty Images

    Online Khabar  என்ற செய்தி இணையத்தளத்தில் வெளியாகியிருந்த புகைப்படத்தொகுப்பில் நேபாள வெள்ளத்தின் பின்னரான புகைப்படங்கள் காணப்பட்டது. குறித்த தொகுப்பிலும் வெள்ளத்தின் பின்னரான நேபாளம் என பகிரும் புகைப்படம் காணக்கிடைக்கவில்லை.

    ஆகவே குறித்த புகைப்படம் செயற்கை நுண்ணறிவினை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழ நாம் செயற்கை நுண்ணறிவினை கண்டறியும் கருவியினை பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டபோது இது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என உறுதியானது.

    Claim 02

    அதேபோன்று பகிரப்பட்ட காணொளி தொடர்பாக நாம் ஆய்வினை மேற்கொண்டபோது, காணொளியில் இருந்த செயற்கை நுண்ணறிவு கருவியான Gemini இன் logo காணக்கிடைத்தது. 

    ஆகவே குறித்த காணொளியினை செயற்கை நுண்ணறிவை கண்டறியும் கருவியை பயன்படுத்தி ஆய்வு செய்தபோது, இதுவும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளி என கண்டறியப்பட்டது.

    Claim 03

    இத்தகைய உண்மையைப் போன்ற புகைப்படங்கள் வெள்ளத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய நிலைகளாக சர்வதேச ஊடக செய்திகள் எதிலும் காணக்கிடைக்கவில்லை. 

    ஆகவே குறித்த புகைப்படமும், செயற்கை நுண்ணறிவு கண்டறியும் கருவி ஒன்றிற்கு உட்படுத்தப்பட்டபோது, 99% மற்றும் 91.7% என்ற அதிக சதவீதத்தில் இது ஒரு AI உருவாக்கம் என்பதற்கான சாத்தியக்கூறையே காட்டியது.

    மேலும், இந்தப் புகைப்படங்கள் OpenAI-ஐப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளனவா எனப் பரிசோதித்தபோது, அவை OpenAI தயாரிப்பைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளன என்பதற்கான ஆதாரமும் கிடைக்கப்பெற்றன. 

    நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், நேபாளத்தில் வெள்ளத்திற்கு முன்பு மற்றும் பின்பு என பரவும் காணொளி மற்றும் புகைப்படங்கள் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டது என கண்டறியப்பட்டது.

    எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  |TikTok | Youtube

    Conclusion: முடிவு

    எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.

    Result Stamp

    Title: நேபாளத்தில் வெள்ளத்திற்கு முன்பு மற்றும் பின்பு என பரவும் காணொளி மற்றும் புகைபடங்கள் உண்மையா..?

    Fact Check By: S.G.Prabu

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2026-09-03

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.