Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    சீனாவில் பறக்கும் ரயில் சேவை தொடங்கப்பட்டதா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2021-03-12
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :சீனாவில் பறக்கும் ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந

    INTRO :
    சீனாவில் பறக்கும் ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    Madawalai News Plas  என்ற பேஸ்புக் பக்கத்தில் ” பறக்கும் ரயில் என்கிறார்களே, அது சைனா அறிமகப்படுத்திய இந்த ரயிலுக்குதான் பொருந்தும். இந்த ரயிலுக்கு சக்கரங்கள் கிடையாது. அதற்கு பதில் அதிக சக்தி வாய்ந்த காந்தங்கள் உடைய பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கிறது. பார்ப்பதற்கு மிக ஆச்சரியமாகவும், விநோதமாகவும், நம்பமுடியாமலும் இருக்கிறது.”  என கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் திகதி  (31.01.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    குறித்த தகவலானது பலராலும் இணையத்தில் பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

    முதலில், நாம் குறித்த வீடியோவை நன்கு அவதானித்தபோது, அது செயற்கையாக உருவாக்கப்பட்டிருந்தமை போன்ற தோற்றம் எமக்கு எழுந்தது.

    எனவே, இந்த வீடியோவில் ஒரு காட்சியை ஸ்கிரின் ஷாட் எடுத்து கூகுளில் பதிவேற்றி ஆய்வு செய்தபோது, இது ஒரு வீடியோ கேம் தொடர்பானது என்று தெரியவந்தது

    இது ஒரு கேம் வீடியோ மட்டுமே, என்று இதனை பகிர்ந்தவரே குறிப்பிட்டிருக்கிறார். ஆனாலும், பலர் இதன் விவரம் புரியாமல் உண்மை எனக் கூறி பல்வேறு மொழிகளிலும் பகிர்ந்து வருகின்றனர். 

    இதுபோன்ற கேம் காட்சிகளை நாம் விரும்பினால், store.trainzportal.com சென்று உருவாக்க முடியும். இதற்கென Trains Railroad Simulator 2019 என்ற பிரிவே அந்த இணையதளத்தில் செயல்படுகிறது.

    எமது தேடலுக்கு அமைய, சீனாவில் மிதக்கும் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக வெளியாகிய தகவல் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.

    எமது இந்திய தமிழ் பிரிவினர் மேற்கொண்ட சோதனையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:சீனாவில் பறக்கும் ரயில் சேவை தொடங்கப்பட்டதா?

    Fact Check By: Nelson Mani 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    NM

    Nelson Mani

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2021-03-12

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.