Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    கிறிஸ்துவ பெண் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாக பகிரப்படும் வீடியோ உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2023-07-24
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO : கிறிஸ்துவ பெண் யாஅல்லாஹ் நீதான் சிறந்தவர் என்றால் எனக்கு ஒரு சைகை காட்டு என்று சொன்ன தாமதம் உடனே வானத்திலிருந்து வந்த இடி சத்தம் தான் கண்ட அற்புதம் உண்மை அல்லாஹ் ஒருவன் இருக்கிறான் என்று புனித இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் என ஒரு வீடியோ சமூக வலைத்தளங

    INTRO :

    கிறிஸ்துவ பெண் யாஅல்லாஹ் நீதான் சிறந்தவர் என்றால் எனக்கு ஒரு சைகை காட்டு என்று சொன்ன தாமதம் உடனே வானத்திலிருந்து வந்த இடி சத்தம் தான் கண்ட அற்புதம் உண்மை அல்லாஹ் ஒருவன் இருக்கிறான் என்று புனித இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் “இந்த கிறிஸ்துவ பெண் யாஅல்லாஹ் நீதான் சிறந்தவர் என்றால் எனக்கு ஒரு சைகை காட்டு என்று சொன்ன தாமதம் உடனே வாணத்திலிருந்து வந்த இடி சத்தம்…………. தான் கண்ட அற்புதம் உண்மை அல்லாஹ் ஒருவன் இருக்கிறான் என்று புனித இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் அல்ஹம்துலில்லாஹ் “ என இம் மாதம் 21 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு  (21.07.2023) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    இதுதொடர்பாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்ட போது, 

    முதலில் குறித்த வீடியோவில் இருந்த இரு பெண்களின் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி அதனை கூகுள் ரிவஸ் இமேஜ் பயன்படுத்தி ஆய்வு செய்தோம்.

    குறித்த தேடலின் போது, காரிற்கு வெளியில் தலையினை இட்டு கத்தும் பெண் ரஷ்யாவை சேர்ந்த டிக்டொக் பிரபலமான Renata Valliulina என்று கண்டறியப்பட்டது. 

    இணையத்தில் வைரலாகும் குறித்த வீடியோ தொடர்பாக தேடிய போது, அவரின் டிக்டொக் கணக்கில் கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்ட ஒரு டிக்டொக் வீடியோ எமக்கு கிடைக்கப்பட்டது. 

    https://www.tiktok.com/@riwww/video/6967770915278966017

    Tiktok | Instagram 

    குறித்த வீடியோ வெறும் 6 செக்கன்கள் மட்டுமே கொண்டதாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

    மேலும் அவரின் கணக்கினை நாம் ஆய்வு செய்த போது, அவர் இஸ்லாம் மதத்தினை ஏற்றதாக எவ்விதமாக வீடியோ பதிவும் பதிவேற்றம் செய்திருந்தமை எம்மால் காணக்கிடைக்கவில்லை.

    தொடர்ந்து இணையத்தில் வைரலாகியுள்ள வீடியோவில் இருந்த மற்றைய பெண்ணை கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, அவர் பெயர் Brooklyn என கண்டறியப்பட்டது.

    மேலும் இவர் அமெரிக்காவை சேர்ந்தவர் என்பதோடு,கிறிஸ்தவம் மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்தினை தழுவியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

    https://www.instagram.com/p/CM3CreYnii8/

    Tiktok | Instagram 

    குறித்த வீடியோவை நன்கு அவதானித்த போது, அதில் இருப்பது வெவ்வேறு பெண்கள் என கண்டறியப்பட்டது. மேலும் இரு வெவ்வேறு வீடியோக்களை ஒன்றாக இணைத்து இணையத்தில் பதிவேற்றம் செய்து பகிர்ந்து வருகின்றமை கண்டறியப்பட்டது.

    நாம் மேற்கொண்ட ஆய்வறிக்கையின் படி கிறிஸ்துவ பெண் இஸ்லாத்தை ஏற்ற கொண்டாதாக பகிரப்படும் வீடியோவில் இருப்பது இரு வேறு பெண்கள் என்பது உறுதியாகின்றது. 

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு


    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:கிறிஸ்துவ பெண் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாக பகிரப்படும் வீடியோ உண்மையா?

    Written By: S.G.Prabu 

    Result: False

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2023-07-24

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.